ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Nenjam Marapathillai Movie Review | புதுமையான வடிவில் ஒரு திகில் படம்... செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை...

Nenjam Marapathillai Movie Review | புதுமையான வடிவில் ஒரு திகில் படம்... செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை...

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம், 5 வருட காத்திருப்புக்குப் பின் திரைக்கு வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம், பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது. 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக திரைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு ஒருவழியாக செல்வராகவன் பிறந்த நாள் ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ளது.

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டத்தை திரில்லர் படமாக தனக்கே உரிய பாணியில் மிரட்டலான திரைக்கதையில் செல்வராகவன் கொடுத்திருக்கிறார். பேய் படம்தான் என்றாலும், தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் பேய் படங்களுக்குரிய அத்தனை அம்சங்களையும் புறக்கணித்துவிட்டு புதுமையான வடிவில் ஒரு திகில் படம் கொடுத்ததன் மூலம், செல்வா தனித்து நிற்கிறார்.

Nenjam Marappathillai Movie release date
நெஞ்சம் மறப்பதில்லை

கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் அசத்திவரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நெஞ்சம் மறப்பதில்லை சந்தேகமே இல்லாமல் ஒரு மைல்கல் சினிமாவாக உருவெடுத்துள்ளது. ராம்சே எனும் துடிப்பான பணக்காரர் கதாபாத்திரத்தில் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான ஒரு நடிப்பைக் கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

கதைப்படி எஸ்.ஜே.சூர்யா நாயகனாக இருந்தாலும், படத்தின் நிஜ நாயகனாக தனது பின்னணி இசையின் மூலம் படத்தையே தாங்கி நிற்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. படம் ஆரம்பித்த நொடியில் துவங்கும் ராஜாவின் ராஜாங்கம் படம் முடிந்த பிறகும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வண்ணம் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை

மேலும் படிக்க...ரூ.650 கோடி வருமானம் குறித்த தகவல்களில் முரண்பாடு: டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் தொடரும் வருமான வரித்துறை சோதனை

மொத்தத்தில், நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வாவின் பெயர் சொல்லும் படமாக மாறியிருப்பதுடன், அவ்வளவு எளிதில் நெஞ்சத்திலிருந்து மறக்க முடியாத படமாகவும் உருவெடுத்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Director selvaragavan, S.J.Surya