Methagu Review: இலங்கை போர் குறித்த புரிதலை உண்டாக்கும் ‘மேதகு’!

மேதகு பிரபாகரன்

மிகக் குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்றாலும் தொழில்நுட்பத்தில் படக்குழுவினர் காட்டியிருக்கும் நேர்த்தி, நல்ல திரைப்படம் பார்க்கும் உணர்வை ரசிகர்களுக்கு கடத்துகிறது.

  • Share this:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளிவந்துள்ள மேதகு திரைப்படம் எவ்வாறு உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

இனம், கன்னத்தில் முத்தமிட்டால் தொடங்கி அண்மையில் வெளிவந்த ஜகமே தந்திரம், ஃபேமிலி மேன் வரை இலங்கை தமிழர் குறித்து எந்த படத்தில் பேசினாலும், அது பெரும் பேசு பொருளாக மாறும். இலங்கை அரசியல் தமிழகத்தில் இப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க, தனித்தமிழீழம் வேண்டி ஏறத்தாழ 30 ஆண்டுகள் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மேதகு திரைப்படம் தத்ரூபமாக பேச முயற்சி செய்துள்ளது.

பிரபாகரனின் வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தை முதல் பகுதியாக பேசி உள்ள இந்த திரைப்படம், யாழ்ப்பாணத்தின் ஆளுநரை பிரபாகரன் கொலை செய்வதுடன் படம் நிறைவடைகிறது. இலங்கையில் நடைபெற்று வரும் போருக்குப் பின்னால் இருக்கும் அரசியலை தெளிவாக விளக்கும் வண்ணம் பிரபாகரனின் ஆரம்ப காலகட்டத்தில், எந்த நிகழ்வுகள் அவரை பாதித்தது என்பதையும், எவ்வாறு அவர் விடுதலை இயக்கத்தை கட்டமைத்தார் என்பதையும் இந்த திரைப்படம் பேசியுள்ளது. குறும் பட இயக்குனரான கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணி பிரபாகரனின் தோற்றம் செயல்பாடுகள் என அத்தனையும் ரசிகர்கள் கண் முன்னே விரியும் அளவிற்கு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு, இலங்கை அதிபர் பண்டாரநாயக்கா - செல்வா இடையே நடைபெற்ற பனிப்போர் ஆகியவற்றை தெளிவாக பேசி உள்ள இந்த திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற போர் குறித்த தெளிவான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிகக் குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்றாலும் தொழில்நுட்பத்தில் படக்குழுவினர் காட்டியிருக்கும் நேர்த்தி, நல்ல திரைப்படம் பார்க்கும் உணர்வை ரசிகர்களுக்கு கடத்துகிறது. தெருக்கூத்து வடிவத்தில் ரசிகர்களுக்கு கதை சொல்ல முயற்சி செய்துள்ளது திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் புதுமையான அனுபவமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் முழுக்க முழுக்க இலங்கை அரசியலை பேசி உள்ளதால் இந்தத் திரைப்படம் இந்திய ஒன்றியத்தில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாமல் இலங்கை போர் குறித்த புரிதலை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ளது. இலங்கை போர் குறித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யும் அடுத்த தலைமுறைக்கு மேதகு திரைப்படம் நல்ல வழிகாட்டு கையேடாக இருக்கும் என ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். BS value வலைதளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: