Home /News /entertainment /

Mahaan Review: எப்படி இருக்கிறது விக்ரம் - துருவ் விக்ரமின் மகான்?

Mahaan Review: எப்படி இருக்கிறது விக்ரம் - துருவ் விக்ரமின் மகான்?

மகான் விமர்சனம்

மகான் விமர்சனம்

இரண்டாவது பாதியில் விக்ரமும் துருவ் விக்ரமும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ஆகச்சிறந்த காட்சியாக உருவாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபிசிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட நட்சத்திர கூட்டணியில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

வாழ்க்கையில் காந்தி மகானின் கொள்கைகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் ஆடுகளம் நரேன் மகனான விக்ரம், தனது நாற்பது வயது வரை காந்திய கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார். காந்தியக் கொள்கைகளை பின்பற்றும் சிம்ரனை மணந்து, அமைதியான வாழ்க்கையில் இருந்த அவர் தனது நாற்பதாவது வயதில் குடிக்க வேண்டும் என ஒரு முறை முயற்சித்து பார்க்க இதன் காரணமாக சிம்ரன் மற்றும் அவரது மகனை பிரிகிறார்.

குடிக்கும் பொழுது அறிமுகமாகும் பால்ய சினேகிதன் பாபி சிம்ஹாவுடன் மீண்டும் நட்பு ஏற்பட்டு மது தயாரிப்பில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் ராஜாவாக வசித்து வரும் விக்ரம், படத்தின் இரண்டாவது பாதியில் பிரிந்து சென்ற தனது மகன் காவல் துறை அதிகாரியாகி வந்து அவரது சாம்ராஜ்யத்தை சிதைக்கும் போது தனது சொந்த மகனை எப்படி எப்படி எதிர்கொள்கிறார் என்பதை சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

ஏறத்தாழ 20 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் கதையில் கதைக்கு தகுந்தார் போல விக்ரம் உடல் எடையை கூட்டி குறைத்து நடித்துள்ளது மீண்டும் ஒருமுறை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாபி சிம்ஹாவுடன் இணைந்து விக்ரம் சாராய சாம்ராஜ்ஜியத்தின் மூடிசூடா மன்னனாக உருவாகும் காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் படத்தின் முதல் பாதி சற்று பொறுமையாக நகர்ந்தாலும், துருவ் விக்ரம் அறிமுகமான பின்னர் கதையில் சுவாரசியம் எடுப்பதால் படத்தின் இரண்டாவது பாதி படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது. ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை காட்டிலும் மகான் திரைப்படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதனை சரியாக பயன்படுத்தி விக்ரமுடன் போட்டிபோட்டு துருவ் நடித்துள்ளது அவரின் நடிப்பாற்றலுக்கு நல்ல முகவரி தந்துள்ளது.

தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

இரண்டாவது பாதியில் விக்ரமும் துருவ் விக்ரமும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ஆகச்சிறந்த காட்சியாக உருவாகியுள்ளது. படம் முழுக்க சந்தோஷ் நாராயணனின் இசை ஒரு சில இடங்களில் படத்திற்கு பலமாகவும் அதுவே ஒரு சில இடங்களில் பலவீனமாகவும் அமைந்துள்ளது. ஒளிப்பதிவு இசைக்கோர்வை என படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் படத்தின் தொழில்நுட்பக் குழு அமைந்துள்ளது, மகான் திரைப்படத்தை நல்ல திரைப்படத்தை பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் துருவ் விக்ரம் மக்கள் மத்தியில் மேலும் பரிட்சயமாக உதவி செய்திருக்கும். ஆனால் அது நேரடியாக ஓடிடியில் வெளியானது அவருக்கு சற்று ஏமாற்றம் என்றாலும், படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் சுவாரசிய படுத்தும் ஒரு திரைப்படமாகவே மகான் திரைப்படம் அமைந்துள்ளது.

சமந்தா, தனுஷை அடுத்து விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை

படத்தின் இரண்டாவது பாதி அளவிற்கு, முதல் பாதியிலும் திரைக்கதையில் இயக்குனர் சிரமம் எடுத்து உழைத்து இருந்தால், விக்ரம் வேதா அளவிற்கு தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திருடன் போலீஸ் கதையாக உருவாகி, கார்த்திக் சுப்புராஜின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மகான் திரைப்படமும் மாறி இருக்கும்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Vikram, Dhruv Vikram

அடுத்த செய்தி