முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாணவன் டூ அப்பா.. கவின் நடித்த 'டாடா' - படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்!

மாணவன் டூ அப்பா.. கவின் நடித்த 'டாடா' - படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்!

நடிகர் கவின்

நடிகர் கவின்

தற்போதைய சூழலில் இருக்கும் ஒரு இளைஞனின் பின்னணியில் DaDa திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து DaDa திரைப்படத்தில் கவின் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், 'முதலும் நீ முடிவு நீ' ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தற்போதைய சூழலில் இருக்கும் ஒரு இளைஞனின் பின்னணியில் DaDa திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெறுகின்றன.

படத்தின் நாயகன் கவின் - நாயகி அபர்ணா தாசும் கல்லூரி நண்பர்கள். இருவரும் காதலிக்கிறார்கள், அதேசமயம் அபர்ணாதாஸ் கர்ப்பமாகிறார். கவின் கருவை கலைக்க வேண்டும் என்கிறார், அபர்ணா குழந்தை வேண்டும் என்கிறார். ஆனால் குழந்தை பிறந்தபின் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தன் தந்தையுடன் அபர்ணா சென்று விடுகிறார். அவர் ஏன் சென்றார்? அதன் பின் இருக்கும் காரணம் என்ன? தன் குழந்தையை கவின் எப்படி வளர்கிறார்? என்பதை சுவாரஸ்யமாகவும், சின்ன சின்ன செண்டிமெண்டுடனும் படமாக்கியுள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு.

அபர்ணா சென்ற பின் தன் குழந்தையை வளர்க்கும் கவின் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் சில கருத்துக்களையும் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு கடத்தி இருக்கிறார் இயக்குனர்.

இந்தப் படத்தில் தேவையில்லாத எந்த காட்சியையும் படத்தில் சேர்காமல் தவிர்த்ததிருப்பதை பாராட்ட வேண்டும். இதே கதையை முழுக்க முழுக்க நகைச்சுவை பின்னணியில் சொல்லியிருக்க முடியும். ஆனால் அதை செய்யாமல் எதார்த்தமான ஒரு செண்டிமெண்டுடன் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.

இதில் நாயகனாக நடித்திருக்கும் கவின் காட்சிகளை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் அவர் அலுவலகத்தில் பணிபுரியும் பிரதீப் தன்னுடைய காட்சிகள் மூலம் ரசிக்க வைக்கிறார் அபர்ணா தாஸ் சில காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும் கிளைமாக்ஸ் கட்சியில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமோ என்ற ஒரு உணர்வை கொடுக்கிறார். நடிகர்களை தவிர, ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

DaDa படத்தில் சில குறைகள் ஆங்காங்கே வந்து செல்கின்றன. அதேபோல் நாயகன் நாயகிக்கு இடையே இருக்கும் ஈகோ பிரச்னைகளை ஏற்கனவே பல தமிழ் படங்களில் நாம் பார்த்துள்ளோம். இருந்தால் அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், இதில் சில புதிய விஷயங்களும், சிரிக்க வைக்கும் நகைச்சுவையும், அழகான செண்டிமெண்ட் காட்சிகளும் பார்பவர்களை ரசிக்க வைக்கும். DaDa-வை புன்னகையுடன் ரசிக்கலாம்.


First published:

Tags: Kavin