• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • KATE - ஆக்ஷன் ரசிகர்களுக்கான திரைப்படம் (திரை விமர்சனம்)

KATE - ஆக்ஷன் ரசிகர்களுக்கான திரைப்படம் (திரை விமர்சனம்)

கேட்

கேட்

பல படங்களில் பார்த்த அதே டெம்ப்ளேட்தான் என்றாலும் ஆக்ஷன் காட்சிகளை ரசிக்கும்படி எடுத்து போரடிக்காமல் கதையை கொண்டு போகிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நெட்பிளிக்ஸில் வெளியாகும் வெப் தொடர்கள் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை. ஆக்ஷ்ன், த்ரில்லர், சயின்ஸ் பிக்ஷன், காமெடி என எதுவாக இருந்தாலும். இதற்கு நேரெதிர் ஒரிஜினல் மூவிஸ். பெரும்பாலும் பொறுமையை சோதிப்பவை. எவ்வித சுவாரஸியமும் இல்லாத வெற்று சண்டைப் படங்கள். கேட் திரைப்படமும் அதே வார்ப்பில் எடுக்கப்பட்டதே. ஆனால், எடுத்த விதத்தில் சுவாரஸியம் சேர்த்திருக்கிறார்கள். சண்டைப் ப்ரியர்களுக்கு படம் பிடிக்கும். 

கேட் ஒரு திறமையான அசாஸின். பணத்துக்காக கொலை செய்கிறவள். அவளது குரு மற்றும் அவளது ஹேண்ட்லர் வாரிக். அவர் மூலமாகத்தான் யாரை கொலை செய்ய வேண்டும் என்ற தகவல் கேட்டிடம் கூறப்படும். ஜப்பானின் ஒசாகா நகரில் அங்குள்ள க்ரைம் சிண்டிகேட்டைச் சேர்ந்த முக்கிய நபரை கொலை செய்ய கேட் காத்திருக்கிறாள். அந்த நபர் காரிலிருந்து இறங்குகையில், கூடவே அவரது பதின்பருவ மகளும் இறங்குகிறாள். குழந்தைகள் முன்னிலையில் கொலை செய்வதில்லை என்பது கேட்டின் கொள்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், கொலை செய்யும்படி மேலிடம் கண்டிப்பாக உத்தரவிட, அந்த நபரை ஸ்னைபர் ஷாட்டின் மூலம் கொலை செய்கிறாள். அந்தப் பெண்ணின் அழுகை கேட்டை எதுவோ செய்கிறது. இன்னும் ஒரேயொரு வேலையுடன் இந்தத் தொழிலைவிட்டு வேறு வாழ்க்கைக்கு திரும்பப் போவதாக கேட் வாரிக்கிடம் கூறுகிறாள். அன்றிரவு அவள் அருந்தும் ஒயினில் விஷம் வைக்கப்படுகிறது.

அது பொலோனியத் - 204 என்ற கதிரியக்க விஷம். 24 மணிநேரத்தில் அளைக் கொன்றுவிடும். அதற்கு உலகில் மாற்று மருந்தில்லை. உயிரோடு இருக்கப்போகும் சில மணித்துளிகளில் தனக்கு விஷம் வைத்தது யார் என்பதை கண்டறிய கேட் கிளம்புகிறாள். அந்த இரவில் அவள் போடும் சண்டைகளும், கொன்று தள்ளும் மனிதர்களும்தான் மொத்த படமும்.

உலகின் மோசமான கொலைகாரர்கள் இப்படி ஒரே இரவில் எதிரிகளை அழிக்கும் கதைகள் ஏராளம் உண்டு. ஜான் விக் திரைப்படம்கூட, இதே சாயலில் எடுக்கப்பட்டதே. கேட்டின் பழிவாங்கும் படத்தில், அவள் கொலை செய்தவரின் மகளே அவளுடன் கூட்டணி சேர்வதும், எதிரி என்று நினைத்தவர் கேட்டிற்கு உதவி செய்வதும் கதையோட்டத்தை போரடிக்காமல் நகர்த்த உதவுகின்றன

Also read... அனபெல் சேதுபதி - அமெச்சூர் ட்ராமா...! (திரை விமர்சனம்)

கேட்டாக நடித்திருக்கும் மேரி எலிசபெத் வின்ஸ்டெட் ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார். அசாஸின் என்றால் நம்புகிற மாதிரியான நடிப்பு. அவரது ஹேண்ட்லராக வூடி ஹாரல்சன். வழக்கம் போல அலட்டிக் கொள்ளாமல் ஸ்கோர் செய்கிறார். ஆனால், அவரது திறமைக்கான தீனி படத்தில் இல்லை. டீன்ஏஜ் பெண்ணாக வரும் ஜப்பானிய நடிகை அருமையான தேர்வு. அவர் வந்த பிறகு படம் சுவாரஸியமாகிறது

பல படங்களில் பார்த்த அதே டெம்ப்ளேட்தான் என்றாலும் ஆக்ஷன் காட்சிகளை ரசிக்கும்படி எடுத்து போரடிக்காமல் கதையை கொண்டு போகிறார்கள். ஆக்ஷன்பட ரசிகர்கள் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: