Home /News /entertainment /

கணம் திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கணம் திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கணம் திரைவிமர்சனம்

கணம் திரைவிமர்சனம்

kanam movie review : கடந்த காலத்திற்கு சென்று தங்களின் சிறுவயது கதாபாத்திரங்களுடன் மூவரும் பயணிக்கும் காட்சிகள் சுவாராஸ்யம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் மீண்டும் தமிழில் நடித்துள்ள கணம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் அமலா, சர்வானந்த்,  சதீஷ், ரமேஷ் திலக், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கணம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் சர்வானந்த் - சதீஷ் - ரமேஷ் திலக் ஆகியோரை சுற்றியே கணம் நகர்கிறது.

சூர்யா - 42 படத்தின் தலைப்பு என்ன? வெளியானது சூப்பர் அப்டேட்!

விபத்தில் தாயை இழந்து தந்தையுடன் வசிக்கும் சர்வானந்திற்கு பாடகராக சாதிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் மக்கள் முன் பாட பயம். அதேபோல் திருமணத்திற்கு பெண் அமையாமல் கஷ்டப்படுகிறார் சதீஷ். ரமேஷ் திலக் சரியாக படிக்காததால் புரோக்கர் வேலை தொழில் செய்கிறார். இந்த மூவருக்கும் தங்கள் வாழ்க்கையை சரி செய்ய டைம் மிஷின் மூலம் கடந்த காலத்திற்கு செல்ல நாசரால் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் சர்வானந்த் தன் தாயை காப்பாற்றினாரா? நண்பர்களின் வாழ்க்கை சரி செய்துகொண்டனரா என்பது படத்தின் மீதி கதை.

ஹாலிவுட்டில் பல டைம் மிஷின் படங்கள் வந்துள்ளன. அதேபோல் தமிழில் இன்று நேற்று நாளை, 24, டிக்கிலோனா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இன்று நேற்று நாளை படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படங்களில் இருந்து இந்த கணம் கதையமைப்பில் தனித்துவம் பெற்றுள்ளது.

பாலிடிக்ஸ் ஐடியா இருக்கா? உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சீரியல் நடிகை!

இந்தப் படத்தில் தாயை காப்பாற்ற காலம் கடக்கும் மகனின் பின்னணியில் கதையை உணர்வுபூர்வமாக கடத்தியுள்ளார் இயக்குநர். கடந்த காலத்திற்கு சென்று தங்களின் சிறுவயது கதாபாத்திரங்களுடன் மூவரும் பயணிக்கும் காட்சிகள் சுவாராஸ்யம்.  இயக்குனரின் அந்த சிந்தனை மிக அழகாக ரசனையுடன் வெளிப்பட்டுள்ளது. மேலும் காமெடி என்ற பெயரில் எதாவது பேசாமல், தங்கள் தவறுகளை தாங்களே சரி செய்ய முயற்சிக்கும் இடங்கள் சிரிக்க வைக்கின்றன. அத்துடன் இடைவேளை டிவிஸ்ட் அனைவரையும் சூப்பர் என சொல்ல வைக்கும்.

கணம் திரைப்படம் நிதானமான திரைக்கத்கையின் மூலமே பயணிக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி சற்று நீளமாக செல்கிறதோ என்ற உணர்வை கொடுக்கும். இருந்தாலும் படத்தின் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும். டைம் மிஷின் மூலம் காலத்தை கடக்கும் கதை என்பதால், அப்போது இருந்த நகரம், மக்களின் தோற்றம் என அனைத்தையும் கச்சிதமாக கையாள முயற்சித்துள்ளனர். ஆனால் சாலை உள்ளிட்ட சில விஷயங்களை மாற்ற முடியவில்லை.

கணம் படத்தில் ஆதியாக வரும் சர்வானந்த் - ஜெய், கதிராக வரும் சதீஷ் - ஹித்தேஷ், பாண்டியாக வரும் ரமேஷ் திலக் - நித்யா ஆகியோர் தோற்றத்தில் ஒரே சாயலில் இருக்கின்றனர். அத்துடன் நடிப்பிலும் அசத்தியுள்ளனர். இவர்களை தவிர அம்மாவாக் நடித்துள்ள அமலா, நம்முடைய அம்மாவை நினைவுபடுத்துகிறார். மேலும் ரித்து வார்மாவிற்கு காட்சிகள் குறைவு. ஆனால் அந்த காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

நடிகர்களை தவிர ஒளிப்பதிவாளர் Jakes Bejoy, ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங், டிசைனர் சிவகுமார் ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கணம் படம் நிதானமாக பயணித்தாலும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நம்முடைய கடந்த காலத்தையும் நிச்சயம் நினைக்க வைக்கும். அதேபோல் பொற்றோரை எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதையும் தோன்ற வைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Movie review, Tamil Cinema

அடுத்த செய்தி