Home /News /entertainment /

Diary Review: அருள்நிதியின் டைரி... சுவாரஸ்யமான த்ரில்லர் படம்!

Diary Review: அருள்நிதியின் டைரி... சுவாரஸ்யமான த்ரில்லர் படம்!

அருள்நிதியின் டைரி

அருள்நிதியின் டைரி

16 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் ஒரு வழக்கை கையில் எடுக்கும் பயிற்சி உதவி காவல் ஆய்வாளரின் பயணமே டைரி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அருள்நிதி நடித்திருக்கும் டைரி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, சாரா ஆகியோர் நடிப்பில் புதுமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் கதிரேசன் தயாரித்திருக்கும் படம் டைரி.

ஊட்டியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் விபத்துகள் நடைபெறுகிறது. அதேபோல் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அதை யார் செய்தது என்பதை 16 ஆண்டுகளாக காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை பயிற்சி உதவி ஆய்வாளர் அருள்நிதி கையில் எடுக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது? 13-வது கொண்டை ஊசி வளைவுக்கும் கொலைக்கும் சம்மந்தம் உள்ளதா? என்பதை திரில்லர் வகையில் எடுத்துள்ளனர்.

முதல் பாதியில் தான் தேர்ந்தெடுக்கும் வழக்கை விசாரிக்க ஊட்டி வருகிறார் அருள்நிதி. அங்கு அவர் சந்திக்கும் மனிதர்கள், விசாரணை என கதை மெதுவாக தொடங்குகிறது. அந்த சமயத்தில் மூன்று பேர் கொண்ட கொலை - கொள்ளை கும்பல் நள்ளிரவு நேரத்தில் ஊட்டியில் இருந்து கோவை செல்லும் பேருந்தில் ஏறுகின்றனர். அதில் வயதான பெண்மணி, கணவனை இழந்த பெண் ஆகியோரும் இருக்கின்றனர். வழியில் முறை பெண்ணை திருமணம் செய்ய ஊருக்கு செல்லும் சாரா, காதல் ஜோடி ருத்ரா ஆகியோரும் ஏறுகினர்.

’மனிதன் மனிதன்' பாடல் டைட்டிலில் இடம்பெற்றது ரஜினி சாரால் தான் - ஏவிஎம் அருணா குகன்!

ஊட்டியில் இருந்து பேருந்து புறப்பட்டபின் திரைக்கதை வேகமெடுத்து நகர்கிறது. காதல் ஜோடி 200 சவரன் நகையுடன் பயணிக்கிறனர். அதை தெரிந்துகொண்ட கொள்ளை கும்பல் நகையை திருட முயற்சிக்கின்றனர். அதனால் பேருந்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும் பேருந்து 13வது கொண்டை ஊசி வளைவு நோக்கி பயணிக்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இதற்கிடையில் வரும் இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் டிவிஸ்ட் சுவாராஸ்யப்படுத்துகிறது.

டைரி படத்தின் பெரும்பாலான காட்சிகள் பேருந்து பயணத்திலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் அதற்குள் உருவாகும் நட்பு, திருமணம், பாடல் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன. அதற்கு அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு பெரும் உதவி செய்துள்ளது. அந்த காட்சிகளை Ron Ethan Yohan-னின் பின்னணி இசை விறு விறுப்பாக மாற்றியுள்ளது.

யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

இந்தப் படத்தின் நாயகன் அருள்நிதி வழக்கம்போல் கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்துகிறார். அதேபோல் சாராவின் கதாபாத்திரம் படத்தை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்துகொடுத்துள்ளார் சாரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படத்தில் பயிற்சி உதவி காவல் ஆய்வாளராக வரும் அருள்நிதிக்கு, காவல் ஆய்வாளராக வரும் நாயகி உதவியாளர் போல் செயல்படுகிறார். அது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. அதேபோல் முதல் பாதி அதிக நேரம் செல்வது போன்ற உணர்வை கொடுக்கிறது. மேலும் இரண்டாம் பாதியில் படம் முடிந்த பின் மீண்டும் காட்சிகள் நகர்கின்றன. ஆனால் அதற்கு ஒரு கதையை கூறி டைரி இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்துள்ளார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்.

இந்தப் படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், ஒரு சுவாரஸ்யமான திரில்லர் படம் பார்த்த உணர்வை டைரி கொடுக்கும்.
Published by:Shalini C
First published:

Tags: Film Review, Movie review

அடுத்த செய்தி