ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Connect Movie Review: எப்படி இருக்கிறது நயன்தாராவின் கனெக்ட் படம்? 

Connect Movie Review: எப்படி இருக்கிறது நயன்தாராவின் கனெக்ட் படம்? 

கனெக்ட்

கனெக்ட்

நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கேர் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் கனெக்ட். இந்தப் படம் வெறும் 99 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. அந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கேர் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் கனெக்ட். இந்தப் படம் வெறும் 99 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் ஒரு மருத்துவரின் குடும்பத்தை மையமாக வைத்து கதை எழுதியுள்ளார் இயக்குனர். மருத்துவரான வினய் கொரோனா பாதிப்பால் இறந்துவிடுகிறார். அவரின் மனைவி நயன்தாரா மற்றும் மகள் ஆகியோருக்கும் தொற்று ஏற்படுகிறது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அப்போது இறந்த தன்னுடைய தந்தையின் ஆவியுடன் பேச மகள் முற்படுகிறார். ஆனால் அவர் தீய சக்தி பேயிடம் மாட்டிகொள்கிறார். அந்த பேய் இடம் இருந்து தன்னுடைய மகளை நயன்தாரா மீட்டாரா என்பதே 'கனெக்ட்'.

திகில் கதையை நம்பி இந்தப் படத்தை எடுத்துள்ளனர். இதில் இடம்பெறும் காட்சிகள் நான்கு இடங்களில் பார்பவர்களை பயமுறுத்தலாம். மற்ற காட்சிகள் எதுவும் பெரிய தாக்கத்தையோ அல்லது விறு விறுப்பையோ கொடுக்கவில்லை.

கொரோனா காலகட்டம் என்பதால் நான்கு அறைகளுக்குள்ளே கதை நகர்கிறது. படத்தில் 13  கதாபாத்திரங்கள் இருந்தாலும் 3 முன்னணி கதாபாத்திரங்களை தவிர, மற்றவர்கள் ஒரு காட்சிகளில் மட்டுமே வந்து செல்கின்றனர்.

இது திகில் படம் என்பதால் ஒலி கலவையில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளனர். படத்தில் இடம்பெறும் காட்சிகள் பார்பவர்களை பயமுறுத்துகிறதோ இல்லையோ. ஆனால் படத்தின் ஒலி கலவை நிச்சயம் பயமுறுத்தும். அதை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். கனெக்ட் படத்தை நல்ல Sound System உள்ள திரையரங்கில் பார்த்தால் அந்த ஒலி கலவையை ரசிக்கலாம்.

தமிழில் முனி, காஞ்சனா போன்ற ஜனரஞ்சக பேய் படங்களும் வந்துள்ளன. அவள் போல மிரட்டலான பேய் படங்களும் வந்துள்ளன. ஆனால் கனெக்ட் இரண்டிலும் சேரவில்லை.

இந்தப் படத்தின் இயக்குனர் நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே மாயா என்ற திகில்படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் வித்தியாசமான திரைக்கதையுடம் பார்பவர்களை மிரட்டியது. அதுபோன்ற ஒரு நேர்த்தி இந்த திரைப்படத்தில் மிஸ்ஸிங். 99 நிமிடங்கள் மட்டுமே ஓடும் படமாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றிருந்தால் ரசித்திருக்கலாம்.

Also read... ’டாப் கன் மேவரிக்’ முதல் ’தி பேட்மேன்’ வரை... 2022-ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்!

இதில் நடித்துள்ள நயன்தாரா, சத்யராஜ், ஒரிரு காட்சிகளில் வரும் அனுபம் கேர் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

திகில் கதையை நம்பி எடுக்கப்பட்ட இந்த கனெக்ட், Full Meals போல் இல்லாமல் variety சாதம் சப்பிட்ட உணர்வையே கொடுக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் நிறைய லாபம் சம்பாரித்துவிடலாம் என்ற எண்ணத்தில் எடுத்ததுபோல் உள்ளது கனெக்ட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nayanthara