முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Captain Movie Review: எப்படி இருக்கிறது ஆர்யாவின் கேப்டன் படம்?

Captain Movie Review: எப்படி இருக்கிறது ஆர்யாவின் கேப்டன் படம்?

கேப்டன் படத்தின் போஸ்டர்.

கேப்டன் படத்தின் போஸ்டர்.

டெடி திரைப்படத்திற்கு பிறகு சக்தி செளந்தர்ராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவாகியிள்ள படம் கேப்டன். இந்தப் படத்தில் நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார் ஆர்யா. அவருடன் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா தயாரித்து நடிதிருக்கும் கேப்டன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

டெடி திரைப்படத்திற்கு பிறகு சக்தி செளந்தர்ராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவாகியிள்ள படம் கேப்டன். இந்தப் படத்தில் நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார் ஆர்யா. அவருடன் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவின் வடக்கிழக்கு பகுதியில் மூன்று நாடுகள் எல்லையில் இருக்கும் காட்டுப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. அந்த பகுதிக்கு செல்லும் ராணுவ வீரர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள். அங்கு என்ன நடந்தது? வீரர்களை யார் கொன்றார்கள் என்று ராணுவத்திற்கு தெரியவில்லை. இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு ஆர்யா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு செல்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கேட்பன் படத்தின் கதை.

சக்தி செளந்தர்ராஜன் தன்னுடைய படங்களில் ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் ஏதேனும் ஒரு விஷயத்தை கையில் எடுத்துகொண்டு படமாக்குவார். அந்த வகையில் இந்த முறை Creature-ஐ கையில் எடுத்துள்ளார். அந்த உயிரினம் தன்னுடைய பகுதிக்குள் வருபர்களை கொல்கிறது? ஆனால் ஆர்யாவை மட்டும் அதால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை பயன்படுத்தி Creature-ஐ அழித்தாரா இல்லையா என்பது படத்தின் முடிவு.

இந்தப் படத்தில் Creature முக்கிய கதாபாத்திரமாகவும், மையப்புள்ளியாகவும் இயக்குனர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதை விட பிரமாண்டமான Creature-களை நம் ரசிகர்கள் ஹாலிவுட் படங்களில் பார்த்து வியந்துள்ளனர். இதனால் கேப்டன் படத்தில் இடம்பெறும் உயிரினத்தை பார்த்து பிரமிக்க வாய்ப்பு இல்லை. அதுவும் அந்த உயிரினம் உருக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் ஓகேவாக மட்டும் இருக்கிறது. இதனால் அதை பார்த்துப் பயப்படும் வகையில் இல்லை. மேலும் ரசிகர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் எழுதப்படமால் மேலோட்டமாக செல்கிறது.

கேப்டன் படத்தில் காட்டுப் பகுதிக்கு செல்லும் ரானுவ வீரர்களை கொல்ல உயிரினம் காரணம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், அதை அழிக்க ஆர்யா குழு மட்டுமே செல்கின்றனர். அங்கு ராணுவ படை செல்லாத்கா என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற பல சிக்கல்கள் படத்தில் உள்ளன. இருந்தாலும் படத்தின் இறுதியில் ஒரு கருத்தை கூற முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அதற்காக இன்னும் கூடுதல் உழைப்பை கொடுத்திருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.

Also read... சூர்யா - 42 படத்தின் தலைப்பு என்ன? வெளியானது சூப்பர் அப்டேட்!

ஆர்யா முதன் முறையாக ராணுவ வீரராக நடித்துள்ளார். அவரின் உடல் மொழி, தோற்றம் ஆகியவை ராணுவ வீரராக காட்டுகிறது. ஆனால் நடிப்பில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல் ஐஸ்வர்யா லட்சுமிக்கான காட்சிகள் மிக குறைவு. மேலும் சிம்ரன் கதாபாத்திரம் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கலாம்.

கேப்டன் படத்திற்கு ஒளிப்பதிவும், டி.இமானின் பின்னணி இசையும் உதவிகரமாக இருக்கிறது. காட்சிகளில் பதட்டம் உருவாகவில்லை என்றாலும், அந்த காட்சியை இமானின் இசை பார்க்க வைக்கிறது.

கேப்டன் படத்தை எடுக்க நினைத்த படக்குழுவின் முயற்சியை பாராட்டலாம். ஆனால் படத்தின் மைய கதையில் தெளிவு இல்லை. மேலும் காட்சிகள் மேலோட்டமாகவே நகர்கிறது. இதனால் இரண்டரை மணி நேர படம் மூன்று மணி நேர படம் போல் தோன்றுகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Arya, Entertainment, Movie review