வசூல் சாதனை செய்தாலும் கதையில் ஈர்ப்பில்லை... ’ட்ரீம் கேர்ள்’ திரை விமர்சனம்

பாலிவுட்டின் ‘கதைகளின் நாயகன்’ ஆக அறியப்படும் ஆயுஷ்மான் குரானா பெண் வேடமிட்டு பெண் குரலில் ரசிகர்களை தன் நடிப்பாலும் நளினத்தாலும் கவர்ந்து இழுத்துவிடுகிறார்.

Web Desk | news18
Updated: September 16, 2019, 10:52 PM IST
வசூல் சாதனை செய்தாலும் கதையில் ஈர்ப்பில்லை... ’ட்ரீம் கேர்ள்’ திரை விமர்சனம்
ட்ரீம் கேர்ள்
Web Desk | news18
Updated: September 16, 2019, 10:52 PM IST
பெண் வேடமிட்டு, பெண் குரலில் சிறப்பாக பேசும் நாடகக் கலைஞன் ஒருவனின் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை காதலும் நகைச்சுவையும் கலந்த கலவையாக ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பில் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படத்தின் நாயகனாகவும் நாயகியாகவும் தேசிய விருது வென்ற ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார். நுஷ்ரத் பரூச்சா, அன்னு கபூர், மன்ஜோத் சிங், விஜய் ராஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாயகன் கரம்வீர் (ஆயுஷ்மான் குரானா) சிறுவயதிலிருந்தே பெண் வேடமிட்டு நாடகக் கலையில் அசத்திவரும் ஒரு கதாபாத்திரம். சீதை வேடம் ஏற்றதாலே ஊர்மக்களால் சீதையாகவே கொண்டாடப்படுகிறார் கரம். ஆனால், பெண் வேடமிட்டு நடிப்பதில் நாட்டமில்லாமல் வேறு வேலை தேடி அலையும் கரம்வீருக்கு இறுதியில் கால் சென்டர் ஒன்றில் வேலை கிடைக்கிறது.


தொலைபேசி வாயிலாக ஆபாச உரையாடலில் ஈடுபடும் வேலைதான் கிடைத்தது. பெண் குரலில் 24 மணி நேரமும் செக்ஸ் சாட் செய்யும் கரம்வீருக்கு அதனாலே சில பாதிப்புகளும், அவமானங்களும் ஏற்படுகின்றன. இதிலிருந்து கரம்வீர் மீள்கிறானா என்பதை நகைச்சுவையுடன் திரைக்கதை ஆக்கியுள்ளார் இயக்குநர்.

படத்தின் கதை முதல் அரை மணி நேரத்திலேயே தெரிந்துவிடுவதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பார்வையாளர்களால் எளிதில் கணித்துவிட முடிகிறது. நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் சொதப்பினாலும் சில இடங்களில் குலுங்க வைக்கின்றன. பாலிவுட்டின் ‘கதைகளின் நாயகன்’ ஆக அறியப்படும் ஆயுஷ்மான் குரானா பெண் வேடமிட்டு பெண் குரலில் ரசிகர்களை தன் நடிப்பாலும் நளினத்தாலும் கவர்ந்து இழுத்துவிடுகிறார்.

ஆயுஷ்மான் மீதுள்ள ஆர்வத்தினாலே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ‘ட்ரீம் கேர்ள்’ பெரும் சாதனையைப் படைத்து வருகிறது. படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடித்திருக்கும் குரானாவுக்கு துணை கதாபாத்திரங்கள் பெரிதாகத் தோள் கொடுக்கவில்லை என்றாலும் ட்ரீம் கேர்ளைக் காணவே திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.

Loading...மேலும் பார்க்க: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிகில் இசை வெளியீட்டு விழா!
First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...