ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அனபெல் சேதுபதி - அமெச்சூர் ட்ராமா...! (திரை விமர்சனம்)

அனபெல் சேதுபதி - அமெச்சூர் ட்ராமா...! (திரை விமர்சனம்)

அனபெல் சேதுபதி

அனபெல் சேதுபதி

Annabelle Sethupathi movie review: நடிகனின் சமூகப் பொறுப்பு என்பது அரசியல் குறித்து கருத்து சொல்வதில்லை. நடிக்கிற படங்களில் அவர்கள் காட்டுகிற ஈடுபாடு. அனபெல் சேதுபதியில் அந்த அக்கறையின் சுவடுகூட விஜய் சேதுபதியிடம் இல்லை.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

அனபெல் சேதுபதி இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகியுள்ளது. படத்தின் டீஸரில் யோகி பாபு தாப்ஸியிடம், "இப்போ எவன் புதுக்கதை சொல்றான், சொன்னதையேதான் திருப்பி சொல்றான்" என்பார். கதையில் எந்த புதுமையும் இல்லை என்ற இயக்குனரின் எச்சரிக்கை அது. படம் பார்த்த பிறகுதான், அணுகுண்டின் மீது அபாயம் என்று எழுதியதுபோல் அது எத்தனை அபத்தமான எச்சரிக்கை என்பது புரிந்தது. 

இன்ஸ்பெக்டர் லிங்கா தனது தாத்தா சுரேஷ் மேனனுக்கு சொந்தமான அரண்மனையை சுத்தம் செய்வதற்காக ஒரு திருட்டு கோஷ்டியை (ராதிகா, ராஜேந்திர பிரசாத், அவர்களின் மகள் தாப்ஸி மற்றும் சுனில்) அனுப்புகிறார். அந்த அரண்மனை சுரேஷ் மேனனின் தாத்தா ஜெகபதி பாபுக்கு சொந்தமானது. அதில் பேய்கள் இருப்பதாக அனைவரும் நம்புகிறார்கள். உள்ளே சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை. உள்ளே சென்ற தாப்ஸியும் ( Taapsee Pannu ) மற்றவர்களும் உயிருடன் திரும்பினார்களா, அந்த அரண்மனையில் உள்ள மர்மம் என்ன என்பதுதான் அனபெல் சேதுபதியின் கதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோர்வையாக சொல்கையில் ஒரு சுவாரஸியமும், எதிர்பார்ப்பும் ஏற்படுகிறதில்லையா? படத்தில் அது துளியும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். படத்தின் முதன்மை கதாபாத்திரம் விஜய் சேதுபதியோ, தாப்ஸியோ அல்ல, அரண்மனை சமையல்காரன் சண்முகமாக வரும் யோகி பாபு. அவர்தான் என்ன நடந்திச்சி தெரியுமா என்று தொடங்கி, என்ன நடக்கும் தெரியுமா என்பதுவரை படத்தின் கதையை விவரிக்கிறார்.

யோகி பாபு (Yogi babu)

அவர் பேசும் நூறு பக்க வசனத்தில் ஒன்றிரண்டு புன்னகைக்க வைக்கிறது. விஜய் சேதுபதி துரை சேதுபதி என்ற நாற்பதுகளின் ராஜாவாக வருகிறார். ஆனால், வசன உச்சரிப்பு துக்ளக் தர்பாரில் வருவது போலவே இருக்கிறது. எதிரி உணவில் விஷம் வைத்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் தானும், மனைவியும் சாகப்போகிறோம் என்ற நிலையில், சோடா குடித்து ஏப்பம் விடுவது போல் அண்ணாந்து ஒரு லுக் விடுகிறார். கொஞ்சம் நடிங்க பாஸ் என்று சொல்லத் தோன்றுகிறது.

Also read... இன்று திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்கள்...!

அரண்மனைக்குள் குடும்பம் குடும்பமாக பேய்கள் இருக்கின்றன. மற்ற பேய் படங்கள் போல் பயமுறுத்துவதோ, பழிவாங்குவதோ அவைகளின் நோக்கமில்லை. அதற்குப் பதில் காமெடி செய்வதாக கழுத்தறுக்கிறார்கள். ராதிகா போன்ற சீனியர் நடிகையே, நீட்டி நீட்டி பேசி, முகத்தை கோணலாக்கி காமெடி என்ற பெயரில் இம்சிக்கிறார். நல்லவேளையாக தாப்ஸி அப்படி இழுக்காமல் இயல்பாக பேசி ஆறுதலளிக்கிறார்.

கதை அரதப்பழசு என்றால் காட்சிகள் அதைவிட புராதனமானவை. எல்கேஜி மாணவர்கள் போட்ட நாடகம் போலிருக்கிறது படமாக்கியிருக்கிறவிதம். பேய் படங்களில் லாஜிக் வேண்டாம், கொஞ்சம் சென்ஸ் ஆவது வேண்டுமல்லவா? சமீபத்தில் இப்படியொரு மோசமான படம் வெளியானதில்லை

நடிகனின் சமூகப் பொறுப்பு என்பது அரசியல் குறித்து கருத்து சொல்வதில்லை. நடிக்கிற படங்களில் அவர்கள் காட்டுகிற ஈடுபாடு. அனபெல் சேதுபதியில் அந்த அக்கறையின் சுவடுகூட விஜய் சேதுபதியிடம் (Vijay Sethupathi) இல்லை

அனபெல் சேதுபதி - பொறுமையை சோதிக்கும் அமெச்சூர் ட்ராமா.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathi, Actor Yogibabu, Radhika, Taapsee Pannu