Home /News /entertainment /

Annaatthe Movie Review: அண்ணாத்த - சிவா செஞ்சிட்டாரா.. வென்றுவிட்டாரா?

Annaatthe Movie Review: அண்ணாத்த - சிவா செஞ்சிட்டாரா.. வென்றுவிட்டாரா?

அண்ணாத்த

அண்ணாத்த

70 வயதிலும் 90களில் பார்த்த அதே துள்ளல் அதே எனர்ஜியுடன் காட்சிக்கு காட்சி வசீகரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை ஒரு முழு படத்தையும் தன் தோளில் சுமந்து ஒன் மேன் ஷோ காட்டி இருக்கிறார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
தொன்றுதொட்டு தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த அண்ணன் - தங்கை சென்டிமென்டையே நம்பி இந்தத் தீபாவளிக்கு வெளியாகியிருக்கிறது ரஜினிகாந்த்தின் அண்ணாத்த.

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகும் திரைப்படம் மற்றும் சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்துள்ளது.

100 ஆண்டு கால தமிழ் சினிமாவில் ஏற்கனவே பலமுறை அலசி எடுத்த அண்ணன் தங்கை சென்டிமென்டை தன்னுடைய பாணியில் ஆக்ஷன் கலந்து ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுக்க நினைத்திருக்கும் சிறுத்தை சிவா அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.

70 வயதிலும் 90களில் பார்த்த அதே துள்ளல் அதே எனர்ஜியுடன் காட்சிக்கு காட்சி வசீகரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை ஒரு முழு படத்தையும் தன் தோளில் சுமந்து ஒன் மேன் ஷோ காட்டி இருக்கிறார். சமீபத்தில் வந்த படங்களிலேயே ரஜினி அதிக உற்சாகத்துடன் நடித்திருக்கும் படம் என்பது திரையில் தென்படுவதுடன் அந்த உற்சாகத்தை ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் வண்ணம் மீண்டும் ஒரு மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார்.

ரஜினிக்கு அடுத்தப்படியாக கதையில் அதிக முக்கியதத்துவம் கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. படம் முழுக்க அழுதுகொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்பதால் அவரும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா என படத்தில் அரை டஜனுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் கதாபாத்திரங்களில் வலு இல்லாததால் மனதில் தங்காமல் செல்கின்றனர்.

ஆரம்பத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ் இடையிலான சில சென்டிமெண்ட் காட்சிகள் நம்மை கலங்க வைத்தாலும் பின்பாதி திரைக்கதையில் அதையே மிகைப்படுத்தி சொல்லியிருப்பது ஒரு கட்டத்தில் சோர்வையே ஏற்படுத்துகிறது. அதேபோல் குடும்ப ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பிற்போக்குத்தனமான வசனங்களை அதிக அளவில் இடம்பெறச் செய்திருப்பதும் நகைச்சுவை எனும் பெயரில் தரக்குறைவான காட்சிகளை வைத்திருப்பதும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Also read... Annaatthe twitter review: எப்படி இருக்கிறது ரஜினியின் அண்ணாத்த?  ட்விட்டர் விமர்சனம்!

ரஜினி படத்துக்கே உரிய உற்சாகத்துடன் பாடல்களை கொடுத்திருக்கும் டி. இமான் பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு அதிகளவில் வலு சேர்த்துள்ளார்.

மொத்தத்தில், ரஜினியின் இந்த 'அண்ணாத்த' குடும்ப ரசிகர்களின் அபிமானமாக படமாக அமைந்தாலும் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான படமாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Annaatthe, Director siva, Rajinikanth

அடுத்த செய்தி