Home /News /entertainment /

Laal Singh Chaddha Review : அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் எப்படி இருக்கிறது?

Laal Singh Chaddha Review : அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் எப்படி இருக்கிறது?

அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் எப்படி இருக்கிறது?

அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் எப்படி இருக்கிறது?

Laal Singh Chaddha Review | அமீர் கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் வெளியாகி உள்ளது அந்த திரைப்படம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் Advait Chandan இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா. 1994-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த Forrest Gump என்ற ஆங்கில படத்தின் உரிமையை பெற்று, இந்திய மொழிகளுக்கு தகுந்தவாறு சின்ன சின்ன மாற்றங்களுடன் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.
இந்தப் படத்தின் தொடக்கத்தில் லால் சிங் சத்தாவாக நடித்துள்ள அமீர்கான், ரயில் பயணத்தில் சக பயணிகளிடம் தன் கதையை சொல்ல தொடங்குகிறார். அந்த கதை, துள்ளாத மனமும் துள்ளும் படம் போல Pre Climax வரை நீள்கிறது. லால் சிங் கதாபாத்திரத்தின் சிறு வயது முதல், அவரின் மகன் பள்ளி செல்வது வரை நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்த காட்சிகளாக வருகின்றன.

எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாக புரிந்துகொள்ளும் திறமை கொண்ட லால் சிங்கிற்கு நடக்க முடியவில்லை. ஆனா மருத்துவர் அவரின் பிரச்னை காலில் இல்லை, எண்ணத்தில் உள்ளது என்கிறார். அந்த சிறுவன் காதலில் விழுகிறார்! ராணுவத்தில் சேர்ந்து சாதனை செய்கிறார்!! மிகப்பெரிய தொழிலதிபராகிறார்!!! அது எப்படி சாத்தியம் என்பதை நிதானமான திரைக்கதை மூலம் சொல்லியுள்ளார் இயக்குநர்.

பள்ளியில் சக மாணவர்கள் லால் சிங்கை புறக்கணிக்கும் போது, ரூபா என்ற மாணவி ஆதரவு கொடுக்கிறார். அந்த நட்பு கல்லூரி காலம் வரை தொடர்கிறது. லால் சிங்கிற்கு உறுதுணையாக இருக்கும் ரூபா ஒரு கட்டத்தில் பிரிந்து செல்கிறார். மனநிலையில் சற்று பிரச்னை இருந்தாலும் அவர் மீது தொடர்ந்து அன்பு செலுத்துகிறார் லால்.காதல், மன்னிப்பு, பாசம் என அனைத்தும் நிறைந்துள்ளது. இந்த கதை நடக்கும் காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற பல முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் போன்றவற்றையும் திரைக்கதையுடன் இணைத்துள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் இந்திராகாந்தி கொலை, அத்வானி பிரச்சாரம், பாபர் மசூதி இடிப்பு போன்றவை இடம்பிடித்துள்ளது. மேலும் மதத்தின் பெயரால் நடைபெறும் கலவரத்தை மலேரியா என்று விமர்சனம் செய்துள்ளனர். அதற்கான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

Also Read : ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா?

இந்தப் படத்தின் நடிகர்கள் தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது. அமீர்கான் தன்னுடைய கதாபாத்திரத்தை அத்தனை கச்சிதமாக செய்துள்ளார். அனைவர் மீதும் அன்பு செலுத்தும் போது, காதலை வெளிப்படுத்தும் போது, தன் எதிரையையே நட்பு பாராட்டும் போது என அனைத்து இடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் தன் கனவு பயணத்தில் சந்திக்கும் ஏமாற்றம், தோல்வி, விரக்தி, காதல் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்  கரீனா கபூர். மேலும் ஷாருக்கானின் சிறப்பு தோற்ற காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும்.இந்தப் படத்தில் மன நிலையில் சற்று பாதிப்பு கொண்ட ஒருவர் எப்படி ராணுவத்தில் சேர்ந்தார்.  லால் சிங்கால் காப்பாற்றப்படும் தீவிரவாதி எளிதாக  தப்பிவிடுகிறார். அவர் யார் என்று தெரியவில்லை என உயர் அதிகாரிகள் கடந்து செல்கின்றனர். இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் இல்லை.
லால் சிங் சத்தா படத்தின் முதல் பாதி இரயில் பயணிகள் போல், லால் சிங் கூறும் கதையுடன் படம் பார்பவர்களும் ஒன்ற முடிகிறது.

Also Read : சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

ஆனால் இரண்டாம் பாதி படம்பார்பவர்களை அதிகம் சோதிக்கிறது. ஒரு கட்டத்தில் படம் முடியுமா? முடியாதா? என்ற எண்ணத்தை தோன்ற வைக்கிறது. அந்த அளவிற்கு திரைக்கதை மெதுவாக நகர்கிறது. இருந்தாலும் இயக்குநரும், அமீர்கானும் தாங்கள் சொல்ல வந்ததை அவர்களின் பாதையில் இருந்து விலகாமல் கூறியுள்ளனர். அதிக பொருமை கொண்டவர்கள் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஆனால் திரில்லார், விறு விறுப்பு போன்ற படங்களை விரும்பவர்களுக்கு இந்தப் படம் நிறைவை கொடுக்காது.
Published by:Vijay R
First published:

Tags: Aamir Khan, Movie review

அடுத்த செய்தி