முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Pushpa Review Tamil: பில்டப் அளவுக்கு படம் இல்லையே - புஷ்பா ரசிகர்கள் ஏமாற்றம்

Pushpa Review Tamil: பில்டப் அளவுக்கு படம் இல்லையே - புஷ்பா ரசிகர்கள் ஏமாற்றம்

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுனின் ஸ்கிரீன் பிரசன்ஸ், சில சண்டைக் காட்சிகள், சமந்தாவின் நடனம் ஆகியவையே படத்தின் பிளஸ்கள்.

  • Last Updated :

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது உண்மைதான் போல. இன்று பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியிருக்கும் புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு மாநிலங்களைத் தாண்டி வடஇந்தியாவிலும், கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புஷ்பா படத்தை 5 மொழிகளில் வெளியிட்டனர். படத்தின் புஷ்பராஜ் அறிகமுக டீஸர் முதலில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தது எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.

சரி, படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் தவறிவிட்டதாக அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். படத்தின் மைனஸ்கள் என்னென்ன?

படத்தின் நீளம். குறைந்தது 20 நிமிடங்களையாவது கத்தரித்திருக்கலாம் என்பது பலரது கருத்து.

புதுமையில்லாத காட்சிகள், விறுவிறுப்பற்ற திரைக்கதை.

சொதப்பலான பகத் பாசில் - அல்லு அர்ஜுன் மோதல்.

இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை தூண்டாத சராசரி கிளைமாக்ஸ். இவையனைத்தும் படத்தின் குறைகளாக பட்டியலிடுகிறார்கள். படத்தின் முன்பகுதியைவிட இரண்டாம் பகுதி போர் என்பது பரவலான குற்றச்சாட்டு.

மேலும் படிக்க - இறுதி கட்டத்தில் பிக் பாஸ் டாஸ்க்... தடைகளை உடைக்கும் போட்டியாளர் யார்?

அல்லு அர்ஜுனின் ஸ்கிரீன் பிரசன்ஸ், சில சண்டைக் காட்சிகள், சமந்தாவின் நடனம் ஆகியவையே படத்தின் பிளஸ்கள்.

சுகுமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ரங்கஸ்தலம் அட்டகாசமான கமர்ஷியல் சினிமாவாக இருந்தது. புஷ்பா அதனைத் தாண்டிச் செல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை தந்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Allu arjun, Telugu movie