மரண மாஸுக்கு டஃப் கொடுத்த விஸ்வாசம்!- ட்விட்டர் விமர்சனம்!

கடந்த வருடம் அஜித்தின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் விஸ்வாசம் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 3:25 PM IST
மரண மாஸுக்கு டஃப் கொடுத்த விஸ்வாசம்!- ட்விட்டர் விமர்சனம்!
அஜித்
Web Desk | news18
Updated: January 10, 2019, 3:25 PM IST
நடிகர் அஜித் நடித்து இன்று வெளியாகியுள்ள விஸ்வாசம் படம் குறித்து ட்விட்டரில் பல விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா 'நிரஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சிவா இயக்கியுள்ளார்.  டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் அஜித்தின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் படம் குறித்து டிவிட்டரில் பல விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வாசம் படம் 10 வருசம் கழிச்சு அஜித்த கொண்டாட வச்ச படம் என்றும்  ட்விட்டரில் பதிவுகள் போடப்பட்டுள்ளது.


இந்த படத்தை போல அஜித் வேற எந்த படத்திலும் வசனங்களை பேசியது இல்லை என்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


 

ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பங்களும் கொண்டாடும் படமாக விஸ்வாசம் படம் உள்ளது என்றும் கூறுகின்றனர்.
Loading...
தரமான விழாக்கோலம் கொண்டுள்ளது விஸ்வாசம் படம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.


விஸ்வாசம் படத்திற்காக செலவு செய்த டிக்கெட் பணம் வீன் போகவில்லை என்றும் ட்விட்டரில் பதிவுகள் வலம் வருகின்றன.


விஸ்வாசம் படம் குறித்து தொடர்ந்து நல்ல வரவேற்புகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் சில நெகட்டிவ் கமெண்ட்டுகளும் பதிவாகியுள்ளது.


Also see...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...