ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Prince Movie Review: தீபாவளி ரேசில் ஜெயித்ததா பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ஃபார்முலா வெற்றியா, படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!

Prince Movie Review: தீபாவளி ரேசில் ஜெயித்ததா பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ஃபார்முலா வெற்றியா, படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!

பிர்ன்ஸ்

பிர்ன்ஸ்

Prince Movie Review: சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல், காமெடி வகையிலேயே இந்தப் படத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவரின் முடிவு சிலரை ரசிக்கவும், சிலரை விமர்சிக்கவும் வைக்கும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தன் வாரிசுகள் காதல் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும் என்று சத்யராஜ் எண்ணுகிறார். ஆனால் தன் வாரிசுகளின் காதலை எதிர்கிறார். அது எதனால் என்பதை நகைச்சுவை பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அனுதீப்.

பாண்டிச்சேரி அருகில் இருக்கும் பிரிட்டிஷ் கிராமத்தில் வசிக்கும் நாயகிக்கும், தேவனக்கோட்டையை சேர்ந்த இளைஞனுக்கும் இடையே காதல் மலர்கிறது. அதற்கு என்ன தடை வந்தது? காதலில் வெற்றி அடைந்தார்களா என்ற இடத்தில் படம் முடிகிறது.

சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல், காமெடி வகையிலேயே இந்தப் படத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவரின் முடிவு சிலரை ரசிக்கவும், சிலரை விமர்சிக்கவும் வைக்கும்.

பிரின்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் சென்றடைவது கடினம். அதே போல் காட்சிகளிலும் சுவாரசியம் குறைவு. இயக்குனர் அனுதீபின் நகைச்சுவை சிந்தனையும், சிவகார்த்திகேயனின் கமர்சியல் ஃபார்முலா சிந்தனையும் பிரின்ஸ் திரைப்படத்தில் கலந்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா என அனைவரும் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர். அதேபோல் நாயகனுக்கு வில்லனாக வரும் பிரேம்ஜிக்கு பிரின்ஸ் வித்தியாசமாக இருந்தாலும், காட்சிகள் ரசிக்கவைக்கவில்லை. அவர் நகைச்சுவை வில்லனாக இருந்தாலும், பல இடங்களில் என்னடா இது என எண்ண வர வைக்கிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, பாடல் இசை உள்ளிட்டவை நன்றாகவே அமைந்துள்ளன. படம் சுவாரஸ்யமாக இருந்திருந்தால் அவை இன்னும் கவனிக்கப்பட்டிருக்கும்.

Also read... சினிமா டிக்கெட் விலையை உயர்த்துங்க.. முதல்வருக்கு தியேட்டர் ஓனர்கள் கோரிக்கை!

இந்திய இளைஞன், பிரிட்டிஷ் பெண் இடையே நடக்கும் காதல் பற்றி ஏற்கனவே சில படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களில் இருந்து இந்த படத்தை வேறுபடுத்த இயக்குனர் அனுதீப் தன்னுடைய ஸ்டைலில் வித்தியாசமான நகைச்சுவை மற்றும் காட்சி அமைப்புகளை கையாள நினைத்திருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் தடம்மாறியுள்ளார்.

ஒரே கதையில் ஏராளமான படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளன. அதற்கு காரணம் அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட விதம் மற்றப்படங்களில் இருந்து வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பிரின்ஸ் கதையும் பழசு, படமாக்க எடுத்த முயற்ச்சியும் ரசிகர்களை சரியான பாதையில் சென்றடையவில்லை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியானா டாக்டர் மற்றும் டான் படங்கள் வெற்றியடைந்தன. இதனால் பிரின்ஸ் படம் மூலம் ஹாட்ரிக் அடிக்க முயற்சித்தார். ஆனால் பால் மிடில் ஸ்டிக்கில் விழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Movie review, Sivakarthikeyan