ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் டுவெல்த் மேன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜீத்து ஜோசப்பின் விருப்பமான த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது.
கல்லூரி முதல் நண்பர்களாக இருப்பவர்கள் தங்கள் மனைவிகளுடன் ரிசார்ட் ஒன்றிற்கு பார்ட்டி கொண்டாட வருகிறார்கள். ரிசார்ட்டில் குடிகார நபர் ஒருவர் பிரச்சனை செய்கிறார். அவரை ஒருவழியாக சமாளித்து, இரவு பார்ட்டியை ஆரம்பிக்கிறார்கள். கணவன், மனைவி மற்றும் நண்பர்களுக்கிடையில் இருக்கும் ரகசியம் குறித்த பேச்சு வருகிறது. சிலர் கணவன், மனைவிக்குள் எந்த ரகசியமும் இருப்பதில்லை என்கிறார்கள். சிலர் மாறுபடுகிறார்கள்.
இதையும் படிங்க.. பிக் பாஸ் வருண் - அக்ஷராவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!
இறுதியில் ஒரு மணி நேரம், அனைவரும் தங்களுக்கு வரும் போன் காலை வெளிப்படையாக ஸ்பீக்கரில் பேசுவது, வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பகிரங்கமாக படிப்பது என முடிவு செய்கிறார்கள்.
சாதாரணமாக ஆரம்பிக்கும் விளையாட்டு விரைவிலேயே விபரீதமாகிறது. நண்பர்களில் ஒருவன், அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களில் ஒருவரது மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பது போன் கால் மூலம் தெரிய வருகிறது. ஒருவரையொருவர் சந்தேகிக்கிறார்கள், குற்றம்சாட்டுகிறார்கள், கோபப்படுகிறார்கள்.
பார்ட்டி ஆரம்பித்த வேகத்தில் முடிவுக்கு வருகிறது. இந்த நேரத்தில் அந்த 11 பேரில் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைகிறார்..அது கொலையா, தற்கொலையா, எதற்காக, யார் இந்த கொலையை செய்து என்பதை ஒரு போலீஸ் அதிகாரி, அவர்கள் நடத்திய போன் விளையாட்டை வைத்தே கண்டுபிடிக்கிறார்.
2016 இல் இத்தாலியில் பெர்பெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் (Original title: Perfetti sconosciuti) என்ற திரைப்படம் வெளியானது. ஒரு கூட்டம் நண்பர்கள் ஒன்றாக பார்ட்டி கொண்டாடுவார்கள். அதில் ஒருவர் உறவுமுறிவுகளுக்கு கவுன்சிலிங் தருகிறவர். தங்கள் பார்ட்னரின் போன் கால்கள் மற்றும் மெசேஜ்களை பகிரங்கமாக படித்தாலே பல தம்பதிகள் பிரிந்துவிடுவார்கள் என்கிறார். அதனை சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். இறுதியில் தங்களுடைய போன் கால்கள், மெசேஜ்களை பகிரங்கப்படுத்துவது என முடிவு செய்கிறார்கள். அதனைத் தொடர்ந்து வரும் போன் கால் மற்றும் மெசேஜ்களிலிருந்து அந்த நண்பர்களில் ஒருவருடைய மனைவிக்கு வேறொருவருடன் தகாத உறவு இருப்பது தெரிய வருகிறது.
இதையும் படிங்க.. 'இதய நாயகன்' டூ 'வெள்ளிவிழா நாயகன்' முரளி பிறந்த நாள் ஸ்பெஷல்!
இதனைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்களில் அவர்கள் அனைவரின் வெளிப்படுத்தாத ரகசியங்களும் வெளியே வருகின்றன.
இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதுடன் விமர்சனம் ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 18 மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு, அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது. இந்தக் கதையில் கூடுதலாக ஒரு மரணத்தைச் செருகி ஜீத்து ஜோசப் டுவெல்த் மேனை எடுத்திருக்கிறார்.
குடிகாரராக வரும் மோகன்லால் சஸ்பென்சனில் இருக்கும் போலீஸ் அதிகாரி என்பது இன்ப அதிர்ச்சி. அவர் கொலை குற்றவாளியையும், அதற்கான காரணத்தையும் கண்டுபிடிப்பது சுவாரஸியமாகவே உள்ளது. ஓடிடி வெளியீட்டுக்கு தகுந்த படம். உலக அளவில் பிரபலமான படத்தின் திரைக்கதையை சுட்டு படமெடுக்கும் போது குறைந்தபட்சம் அதனை டைட்டிலில் குறிப்பிட வேண்டும் என்ற மரியாதைகூட இயக்கியவருக்கும், தயாரித்தவருக்கும் தெரியவில்லை. டுவெல்த்மேன்... ஆவரேஜ் த்ரில்லர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.