• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவி 'வானத்தைப் போல' சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை - செம சர்ப்ரைஸ் காத்திருக்கு!

சன் டிவி 'வானத்தைப் போல' சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை - செம சர்ப்ரைஸ் காத்திருக்கு!

நடிகை மௌனிகா

நடிகை மௌனிகா

தேவதை என்ற தொடர் மூலம் அறிமுகமான நடிகை மௌனிகா, வம்சம், தென்பாண்டி சிங்கம், யாரடி நீ மோகினி, வள்ளி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

  • Share this:
சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எங்க அண்ணன் என சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை பாடலுடன் வெளியான இந்த சீரியலின் புரோமோ ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இது சீரியல் நம்ம வீட்டுப் பிள்ளை என ரசிகர்களை கொண்டாட வைத்தது. நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள தமன் குமார் இந்த சீரியலில் ஹீரோவாக களமிறங்கினார். அவருக்கு தங்கையாக துளசி என்ற கதாப்பாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார். துளசியின் காதலராக வெற்றி என்ற வேடத்தில் அஸ்வந்த் திலக் நடிக்கிறார்

மேலும் இயக்குநர் மனோஜ் குமார், பிரபல நடிகர் மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் செம்பருத்தி, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழடைந்த மௌனிகா இந்த சீரியலில் களமிறங்குகிறார். இந்த சீரியலில் வெற்றியாக நடித்துவரும் அஸ்வந்திற்கு தங்கையாக பூரணி என்ற வேடத்தில் நடிக்கிறார். அவர் அறிமுகமாகும் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகவுள்ளன.

ALSO READ : ’என்னையும் கைது செய்யுங்கள்’ நடிகை ஓவியா ட்வீட்

இதனை அஸ்வந்த் திலக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வானத்தைப் போல சீரியலை பார்க்க மறக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சின்ராசு தனது தங்கை துளசியின் கல்யாணம் நின்றதற்கு வெற்றி தான் காரணம் என நினைக்கிறார். ஆனால் துளசியின் கல்யாணம் நின்றதற்கு நான் காரணம் இல்லை, அது எதிர்பாராத நிகழ்வு என்பதை விளக்க, வெற்றி , சின்ராசுவின் வீட்டுக்கு வருகிறார். அங்கே அவர் மீது கோபத்தில் இருக்கும் சின்ராசு, ஊர் மக்களுடன் வெற்றியை அடித்து விடுகிறார்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Ashwanth Seenu (@thilak.tilu)






 

 

இந்த தாக்குதலில் வெற்றி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வெற்றி வீட்டார் காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறையினர் சின்ராசுவை கைது செய்கின்றனர். இனி வரும் நாட்களில் இன்னும் சுவாரஸியமான அத்தியாயங்கள் காத்திருக்கின்றன.

ALSO READ :  ரம்ஜான் ஸ்பெஷல்: மகளின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட துல்கர் சல்மான்!

தேவதை என்ற தொடர் மூலம் அறிமுகமான நடிகை மௌனிகா, வம்சம், தென்பாண்டி சிங்கம், யாரடி நீ மோகினி, வள்ளி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது செம்பருத்தி, மற்றும் ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் மௌனிகாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: