Home /News /entertainment /

இதயத்தை திருடாதே சீசன் 2-வில் இணைந்த பிரபல சீரியல் நடிகை

இதயத்தை திருடாதே சீசன் 2-வில் இணைந்த பிரபல சீரியல் நடிகை

இதயத்தை திருடாதே 2

இதயத்தை திருடாதே 2

இதயத்தை திருடாதே அத்தியாயம் 2-ல் நடிகை மெளனிகா தேவி, மித்ரா என்ற டீச்சர் கேரக்டரில் நடிக்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரை ரசிகர்களை தன் பக்கம் மெதுவாக ஈர்த்து வருகிறது கலர்ஸ் தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் சீசன் சமீபத்தில் துவங்கியது. ஏற்கனவே சீசன் 1-ல் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்த சிவா மற்றும் சஹானா கேரக்டர்கள் சீசன் 2-விலும் தொடர்கிறது. இந்த கேரக்டரில் முந்தைய சீசனில் நடித்த நவீன் குமார் மற்றும் ஹிமா பிந்து ஆகியோர் இதிலும் தொடர்கின்றனர்.

சீசன் 1-ன் நிறைவில் சிவா ஜெயிலுக்கு செல்வது போல காட்டப்பட்ட நிலையில், இந்த சீசனில் அவர் கிங் என்ற பெயரில் பெரிய டான் போல காட்டப்படுகிறார். அதே நேரத்தில் தன் மகளுடன் வசித்து வரும் சஹானா பெரிய தொழிலதிபராக உள்ளார். சீசன் 1-ல் கட்டப்பட்ட காலகட்டத்திலிருந்து சுமார் 6 ஆண்டுகள் கழித்து நடைபெறும் கதையாக சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சிவா - சஹானா தம்பதியரின் மகளாக ஐஸ்வர்யா என்ற கேரக்டர் இந்த சீசனில் புதிதாக இணைந்துள்ளது. தனது தந்தை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கும் ஐஸ்வர்யாவிடமிருந்து சிவா பற்றிய தகவல்களை மறைத்து அவளை வளர்க்க நினைக்கிறார் சஹானா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனத்தை விவகாரத்தில் தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டம், சிவா பெரிய டானாக மாறியது எப்படி உள்ளிட்ட பல சுவாரஸ்யங்களுடன் இதயத்தை திருடாதே சீசன் 2 கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. இதனிடையே இதயத்தை திருடாதே சீசன் 2-வில் நடிகை மெளனிகா தேவி இணைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதயத்தை திருடாதே அத்தியாயம் 2-ல் நடிகை மெளனிகா தேவி, மித்ரா என்ற டீச்சர் கேரக்டரில் நடிக்கிறார். 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தவர் நடிகை மெளனிகா தேவி.

Also read... பிக்பாஸ் ஜோடிகள்: ரம்யா கிருஷ்ணனுடன் மோதல் ஏன்? வனிதாவின் சரவெடி பதில்!

ஆந்திராவில் படித்து பட்டம் பெற்ற பின்னர் மாடலிகங் துறையிலும் நுழைந்தார். பின்னர் ஒரு தெலுங்கு நியூஸ் சேனலில் நியூஸ் ரீடராக தனது ஸ்க்ரீன் வாழ்க்கையை தொடங்கினார். ஏராளமான டிவி விளம்பரங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் “சாலையோரம்” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அவர் “ஹரா ஹர மகாதேவகி” திரைபடத்தில் தோன்றினார். பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியலில் நிலா மற்றும் தியா என்ற இரட்டை வேடத்தில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். பூவே செம்பூவே சீரியலில் பத்ரா கேரக்டரில் நடித்தார்.
இதனிடையே இதயத்தை திருடாதே 2-வில் இணைந்துள்ள தகவலை முன்னணி நடிகர் நவீன்குமாருடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இதயத்தை திருடாதே-விலிருந்து புதிய தொடக்கம் என்று கேப்ஷனிட்டுள்ளார். கலர்ஸ் தமிழில் இரவு 8.30 முதல் 9.30வரை ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியலை மிஸ் செய்யாதீர்கள் என்றும் நடிகை மவுனிகா தேவி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இதயத்தை திருமதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்து, நியூ பிகினிங்ஸ் என்னவென்று யூகிக்கவும் என்று ரசிகர்களை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்து.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி