கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊரடங்கு உத்தரவை மீறியது, அனுமதியின்றி கூடியது, நோய்ப் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளி காவல் நிலைங்களில் அவ்வப்போது வழக்கு பதிவு செய்யப்படுகின்றன.

ஊரடங்கு உத்தரவை மீறியது, அனுமதியின்றி கூடியது, நோய்ப் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளி காவல் நிலைங்களில் அவ்வப்போது வழக்கு பதிவு செய்யப்படுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருச்சி மாநகரில் ஊரடங்கு காலத்தில் போராட்டம் நடத்தியதாக கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, அய்யாக்கண்ணு உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்க காலத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு, நிவாரண உதவிகள், அடிப்படை வசதிகள்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விசாயிகள் சங்கத்தினர், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இவர்கள் மீது  ஊரடங்கு உத்தரவை மீறியது, அனுமதியின்றி கூடியது, நோய்ப் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளி காவல் நிலைங்களில் அவ்வப்போது வழக்கு பதிவு செய்யப்படுகின்றன.
இந்த வழக்குகள் அரசு அறிவுறுத்தல்படி ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திருச்சி மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற கொரோனா கால போராட்ட வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Also read... தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

சில வழக்குகளில்  சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி மாநகரில் மட்டும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 5,000 மேற்பட்டோர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்து முடிவிற்கு வரும் என்றும் காவல் துறை வட்டாரத்தில் கூறுகின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: