பிரபலமான நடிகர், நடிகைகளின் 'தனிப்பட்ட விவகாரங்கள்' தலைப்பு செய்திகளாவது நீண்டகாலமாக இருந்துவருகிறது. இன்னும் சொல்லப்போனால், சினிமா பிரபலங்களின் திரைப்படங்களை விட அவர்களின் சொந்த வாழ்க்கை தான் அதிகமாக விமர்சிக்கப்பட்டுவருகிறது.
மறுபுறம், நடிகர் - நடிகைகள், இதெல்லாம் பொருட்படுத்தினால் சினிமாவில் வேலை பார்க்க முடியுமா என்று கூலாக தத்தம் வேலைகளை பார்த்து கொண்டும், வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கு திரையுலகின் பிரபல ஜோடிகளான நாகசைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து செய்தனர். அந்தச் செய்தி தேசிய அளவில் அதிக அளவில் கவனிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷூம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவாகரத்து செய்தனர். இதுவும் அதிக அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது.
சிறந்த நடிகர் என்று இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ள தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஆகிய இருவரும், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி, தங்களது 18 வருட இல்லற வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகவும், ஒருவர் மீதான மற்றொருவரின் புரிதல் காரணமா பிரிவதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த சினிமா துறைக்கும் ஷாக் கொடுத்தனர்.
நடிகர் தனுஷ், 18 நவம்பர் 2004 அன்று ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை மணந்தார். இந்த தம்பதியினருக்கு 2006 மற்றும் 2010-இல் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இதற்கிடையில் தனுஷ் - ஐஷவ்வர்யா ஜோடி பிரிவை அறிவிக்க, தனுஷின் மாமனாரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் இருவரையும் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், அது சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது
மறுபக்கம், தனுஷின் தந்தை மற்றும் பிரபல இயக்குனரான கஸ்தூரி ராஜா, தனுஷ் - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் விவாகரத்தே செய்யவில்லை என்று தெரிவித்து இருந்தார். ஆனால் ஐஸ்வர்யாவின் சமீபத்திய நடவடிக்கை ஒன்றை பார்க்கும் போது - அப்படி தெரியவில்லை!
Also Read : இயக்குநர் பாலா போட்ட கட்டளை... ஏற்க மறுத்த செம்பருத்தி சீரியல் நடிகை!
பிரிந்து விட்டோம் என்று அறிவித்த பின்னரும் கூட ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்கிற பெயரை மாற்றாமலேயே இருந்தார். இந்த இடத்தில் தான், இவ்விருவரும் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்புள்ளதாக ரசிகர்களும், விமர்சகர்களும் நம்பினர். தற்போது அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் ஒன்றைச் செய்தார் ஐஸ்வர்யா.
விவாகரத்தை அறிவித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஐஸ்வர்யா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து "தனுஷ்" ஐ தூக்கி உள்ளார். அதாவது முன்னதாக ஐஸ்வர்யா தனுஷ் என்றிருந்த ப்ரொஃபைல் பெயரை ஐஸ்வர்யா ரஜினி என்று மாற்றி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அடுத்த வீட்டு பிரச்சனை என்றால் தாங்க மாட்டார்களே? - "ஏன் தனுஷ் பெயரை தூக்கிடீங்க?", "ப்ளீஸ் மீண்டும் தனுஷூடன் சேருங்கள்" என கமென்டில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Also Read : டி.ராஜேந்தர் கார் மோதி முதியவர் பலி... சிசிடிவி காட்சிகள்
இவ்விருவரின் ரசிகர்கள் தான் இவ்வளவு சீரியஸாக உள்ளனர். பிரிந்து போன இருவரும், அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாகவே உள்ளனர். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் மாறன் திரைப்படம் வெளியானது. தவிர "நானே வருவேன்", "திருச்சிற்றம்பலம்", "வாத்தி/சார்", "தி கிரே மேன்" மற்றும் "ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2" ஆகிய படங்களையும் தனுஷ் தன் கைவசம் வைத்துள்ளார்.
மறுபக்கம் ஐஸ்வர்யா, இந்தி - தமிழ் ரொமான்டிக் சிங்கிளான ’முசாஃபிர்’ என்கிற மியூசிக் வீடியோ மற்றும் தனது மூன்றாவது திரைப்பட வேலைகளில் பிசியாக உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.