• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Mohanlal: ஓடிடியில் வெளியான பின் திரையரங்கு - மோகன்லால் படம் சாதனை!

Mohanlal: ஓடிடியில் வெளியான பின் திரையரங்கு - மோகன்லால் படம் சாதனை!

த்ரிஷ்யம் 2

த்ரிஷ்யம் 2

யுஏஇ யில் 27 திரையரங்குகளிலும், கத்தாரில் எட்டு திரையரங்குகளிலும், ஓமனில் இரு திரையரங்குகளிலும் த்ரிஷ்யம் 2 திரையிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நேரடியாக ஓடிடியில் வெளியான பிறகு ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது அரிது. மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 அதனை சாதித்திருக்கிறது.

ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் 2 இந்த வருட ஆரம்பத்தில் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் கேரளாவைத் தாண்டியும் படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர். படமும் அவர்களை ஏமாற்றவில்லை. கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக்காகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் யுஏஇ யில் 27 திரையரங்குகளிலும், கத்தாரில் எட்டு திரையரங்குகளிலும், ஓமனில் இரு திரையரங்குகளிலும் த்ரிஷ்யம் 2 திரையிடப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் கணிசமான மலையாளிகள் உள்ளனர். மலையாளப் படங்கள் அங்கு நல்ல வரவேற்பை பெறும். அதனை மனதில் வைத்து த்ரிஷ்யம் 2 வை வெளியிட்டுள்ளனர்ஓடிடியில் ஏற்கனவே பெரும்பாலானவர்கள் படத்தைப் பார்த்திருந்தாலும், திரையரங்கிலும் படம் வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Also read... Ajith Kumar: அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளத்தில் இடம்பெற்றுள்ள தல அஜித்தின் மெகா ஹிட் படங்கள்!

மோகன்லால் நடிப்பில் அடுத்து மராக்கர் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் ஓணத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை இந்தியாவில் வெளியாகும் அதேநாள் வெளிநாடுகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்குள் கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பதே சந்தேகத்துக்குரிய விஷயமாக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: