ஐஎம்டிபி தளத்தில் முதலிடம் - த்ரிஷ்யம் 2 மேலுமொரு சாதனை!

த்ரிஷ்யம் 2

உலக அளவில் இதுநாள்வரை வெளியான படங்களில் சூர்யாவின் சூரரைப் போற்று 9.1 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், 9.2 புள்ளிகளுடன் பிரான்ஸ் போர்ட் கப்போலா இயக்கிய மார்லன் பிராண்டோவின் தி காட்ஃபாதர் திரைப்படம் முதலிடத்திலும் உள்ளன. 

  • News18
  • Last Updated :
  • Share this:
த்ரிஷ்யம் 2 திரைப்படம் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இன்டர்நேஷனல் மூவி டேட்டா பேஸ் தளத்தில், இந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2013-ல் வெளியான த்ரிஷ்யம் த்ரில்லர் படங்களில் புதிய சாதனையை படைத்தது எனலாம். பொதுவாக த்ரில்லர் படங்களை குடும்பமாக அமர்ந்து பார்ப்பது குறைவு. ஆனால், த்ரிஷ்யத்தை குடும்பங்கள் கொண்டாடின. படம் வெற்றி பெற்றதோடு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருடம் பிப்ரவரியில் த்ரிஷ்யம் 2 நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது அதன் தெலுங்கு, கன்னட ரீமேக்குகள் தயாராகி வருகின்றன. இந்தி, சீனா ரீமேக் உரிமைகள் வாங்கப்பட்டுள்ளன. கமல் சம்மதித்தால் தமிழிலும் த்ரிஷ்யம் 2 ரீமேக் செய்யப்படும்.

Also read... சிறுமியின் முடிவால் நெகிழ்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி - ட்விட்டரில் நன்றி தெரிவித்து வீடியோ!

இந்நிலையில, இந்த வருடம் வெளியான படங்களில் 8.8 புள்ளிகளுடன் முதலிடத்தில் த்ரிஷ்யம் 2 உள்ளதாக ஐஎம்டிபி தளம் வெளியிட்டுள்ள பட்டியல் தெரிவிக்கிறது. இது இந்த வருடத்துக்கான பட்டியல்

அதேநேரம், உலக அளவில் இதுநாள்வரை வெளியான படங்களில் சூர்யாவின் சூரரைப் போற்று 9.1 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், 9.2 புள்ளிகளுடன் பிரான்ஸ் போர்ட் கப்போலா இயக்கிய மார்லன் பிராண்டோவின் தி காட்ஃபாதர் திரைப்படம் முதலிடத்திலும் உள்ளனஉடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: