• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் மம்மூட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்

ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் மம்மூட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்

மம்மூட்டி - மோகன்லால்

மம்மூட்டி - மோகன்லால்

ரசிகர்கள் அடித்துக் கொண்டாலும், மம்மூட்டியும், மோகன்லாலும் நல்ல நட்புடன் இருப்பதாக சிலர் தெரிவித்தனர்

  • Share this:
    சமூக வலைதளங்களில் மம்மூட்டி - மோகன்லால் ரசிகர்களுக்கிடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், மம்மூட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்திருக்கிறார் மோகன்லால்.

    மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி மோதலில் ஈடுபடுவார்கள். மோகன்லால் படங்கள் ரிலீசாகும்போது மம்முட்டி ரசிகர்களும், மம்மூட்டி படங்கள் ரிலீஸாகும் போது மோகன்லால் ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்து சண்டையில் ஈடுபடுவார்கள்.

    இந்நிலையில் மலையாள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் முதல் பாதியில் மம்மூட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், முக்கியத்துவம் இல்லாத இரண்டாம் பாதியில் மோகன்லாலை நடிக்க வைத்து அவமதித்துவிட்டதாகவும், பிரச்னையைக் கிளப்பினர் மோகன்லால் ரசிகர்கள். அதோடு அந்தப் படத்தை தாங்கள் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

    ரசிகர்கள் அடித்துக் கொண்டாலும், மம்மூட்டியும், மோகன்லாலும் நல்ல நட்புடன் இருப்பதாக சிலர் தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்தும் பொருட்டு, கொச்சியில் மம்மூட்டி புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்தார் நடிகர் மோகன்லால். அதோடு அங்கு மம்மூட்டியுடன் எடுத்துக் கொண்ட கேண்டிட் படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்தப் படத்தை இருவரது ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: