மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் திரைப்படம் அட்டர் பிளாப்பான காரணத்தால் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடியில் வெளியாகிறது.
இந்த வருடம் இந்திய அளவில் வெளியான பிரமாண்ட படங்களுள் மோகன்லாலின் மரைக்காயர் திரைப்படமும் ஒன்று. மலையாளம், தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியிட்டனர். கேரளாவில் அதிக திரையரங்குகள், அதிக ரசிகர் மன்ற காட்சிகள், அதிக ஒருநாள் காட்சிகள் என மரைக்காயர் ரிலீஸுக்கு முன் பேசுபொருளானது. வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இதேபோல் அதிக திரையரங்குகளில் வெளியானது.
முன்பதிவிலேயே 100 கோடியை தாண்டியது என்றெல்லாம் பேசினர்.
அனைத்தும் டிசம்பர் 2 படம் வெளியாகும்வரை. படத்தின் கதை, திரைக்கதை, காட்சிகள் என அனைத்திலும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சொதப்பி வைத்திருந்தார். இதனால் பிரமாண்ட தயாரிப்பு இருந்தும் படம் அட்டர் பிளாப்பானது. சூப்பர் ஸ்டாரின் படமாக இருந்தாலும் படம் மோசம் என்றால் மோசம் என்று சொல்கிற வழக்கம் மலையாள ரசிகர்களுக்கு உள்ளதால் அண்ணாத்த படத்தைப் போல் மரைக்காயருக்கு பாஸிடிவ் விமர்சனங்கள் வலிந்து திணிக்கப்படவில்லை.
ALSO READ | செல்வராகவன் படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் நீக்கம்
மரைக்காயர் வெளியாகி மூன்று வாரங்கள் கழிந்த பிறகு டிசம்பர் 24 அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகும் என்றே சொல்லப்பட்டது. படம் ப்ளாப்பானதால் ஒருவாரம் முன்னதாக டிசம்பர் 17 ஆம் தேதியே படத்தை ஓடிடியில் வெளியிடுகின்றனர். நாள்கள் செல்லச் செல்ல ஓடிடி நிறுவனங்கள் படத்துக்கான விலையை குறைக்கும் ஆகவே முன்கூட்டியே படத்தை ஓடிடியில் வெளியிடுகின்றனர். அளவுக்கு மீறிய புரமோஷனும், எதிர்பார்ப்பும் ஒரு படத்தை எப்படி சீரழிக்கும் என்பதற்கு உதாரணம் மரைக்காயர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Keerthy suresh, Mohanlal