த்ரிஷ்யம் 2 ரிலீஸ் தேதி வெளியீடு!

த்ரிஷ்யம் 2 ரிலீஸ் தேதி வெளியீடு!

த்ரிஷ்யம் 2

தமிழில் கமல், கெளதமி, நிவேதா தாமஸ் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியானது.

  • Share this:
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'த்ரிஷ்யம் 2' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

2013-ம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இப்படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.



‘மூன்று தலைமுறை நடிகர்கள்’ அருண் விஜய் வெளியிட்ட அட்டகாச படம்!

தமிழில் கமல், கெளதமி, நிவேதா தாமஸ் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியானது. இதனையடுத்து, த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதனையும் இயக்குநர் ஜீத்து ஜோசப் தான் இயக்கியுள்ளார்.

முன்னணி கதாபாத்திரங்களில் மோகன்லாலும், மீனாவும் நடித்துள்ளனர். கடந்த மாதம் த்ரிஷம் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதோடு த்ரிஷயம் 2 படம் நேரடியாக அமேசான் ப்ரைம் த தளத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: