Suriya: நடிகர் சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு...!

சூர்யா

ஆச்சரியா படப்பிடிப்பில் பிஸியாக இருந்திருக்கிறார் சிரஞ்சீவி. எனினும், எப்போது வேண்டும் என கேட்க, பத்து தினங்களுக்குள் பேசித் தந்தால் நல்லது என்றிருக்கிறார் மோகன் பாபு.

  • News18
  • Last Updated :
  • Share this:
தெலுங்கு நடிகர் மோகன் பாபுக்கு இப்போதும் பெரிய ரசிகர் வட்டாரம் இருக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பர். கலைஞர் மீது பெருமதிப்பு கொண்டவர். சென்னையில் தனது கரியரை தொடங்கியதால், சென்னையை தனது இன்னொரு தாய்வீடாகச் சொல்கிறவர். அவ்வப்போது பழைய நினைவில் 'ஆங்கிரி ஓல்ட்மேன்' ஆக படங்களில் நடிப்பார். அப்படியொரு படம், சன் ஆஃப் இந்தியா.

இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதையொட்டி சிரஞ்சீவிக்கும், நடிகர் சூர்யாவுக்கும் மோகன் பாபு நன்றி தெரிவித்துள்ளார். டீஸரில் மோகன் பாபுவை அறிமுகப்படுத்தும் வாய்ஸ் ஓவரை சிரஞ்சீவி பேசினால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆச்சரியா படப்பிடிப்பில் பிஸியாக இருந்திருக்கிறார் சிரஞ்சீவி. எனினும், எப்போது வேண்டும் என கேட்க, பத்து தினங்களுக்குள் பேசித் தந்தால் நல்லது என்றிருக்கிறார் மோகன் பாபு. ஆனால், நாலாவது நாளே டப்பிங் தியேட்டரை புக் செய்துவிட்டு படத்தின் தயாரிப்பாளரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவை அழைத்து, டப்பிங் பேசி முடித்திருக்கிறார். நெகிழ்ந்து போய் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் மோகன் பாபு.

Also read... Bhumika Chawla: சல்மான் கான் ஷோவில் நானா? மறுத்த பூமிகா சாவ்லா!

டீஸரை சூர்யா வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என அவரிடம் கேட்க, நாமெல்லாம் ஒரே குடும்பம், கேட்கவே வேண்டியதில்லை என்று டீஸரை வெளியிட்டிருக்கிறார். அவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் மோகன் பாபு.  சன் ஆஃப் இந்தியாவுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். டைமண்ட் ரத்ன பாபு எழுதி, இயக்கியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: