‘மிகச் சிறிய’ மேலாடையால் விமானத்தில் ஏற மாடல் அழகிக்கு மறுப்பு!

இசபெல்லா

தொற்றுநோய்களின் போது வேறொருவரின் சீருடையை அணியச் செய்த விமானக் குழு உறுப்பினரின் நடவடிக்கை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

 • Share this:
  இசபெல்லா எலினோர் என்ற இன்ஸ்டாகிராம் மாடல் அழகி, ஆஸ்திரேலிய விமான நிறுவனமான ஜெட்ஸ்டாரின் ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அந்த பெண் தன் உடலை மறைக்க வேறொரு ஆடை அணியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

  மாடல் இசபெல்லா எலினோர் ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டிலிருந்து, மெல்போர்னுக்கு ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணம் செய்ய முனைந்த போது, அவரது ஆடை பொருத்தமானது அல்ல என்று விமான உதவியாளர் கூறினார். அவர் ஒரு ஹை-வெஸ்ட் ஜீன்ஸும், க்ராப் டாப்பும் அணிந்திருந்தார். ஜெட்ஸ்டாரின் இந்த செயல் ‘பாரபட்சமான நடத்தை’ என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இசபெல்லா.   
  View this post on Instagram

   

  A post shared by ISABELLE (@isabelle.eleanore)


  பிப்ரவரி 1-ம் தேதி திங்கட்கிழமை நடந்த சம்பவம் குறித்து, ஒரு வீடியோவை இசபெல் பகிர்ந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. தனது ஆடையை பிகினி எனக் குறிப்பிட்டு, அதை அணிந்து விமானத்தில் செல்ல முடியாது என, விமான பணிப்பெண் தன்னிடம் கூறியதாக இசபெல்லா குறிப்பிட்டுள்ளார்.

  மாடல் ஜீன்ஸும் க்ராப் டாப்பும் அணிந்திருந்த போது, விமான ஊழியர்கள் தன்னை வெறுப்புடன் பார்த்ததாகவும், விமானத்தில் ஏற செக்-இன் செய்தபோது சக பயணிகள் யாரும் எதுவும் சொல்லவில்லை எனவும் இசபெல்லா தெரிவித்திருக்கிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by ISABELLE (@isabelle.eleanore)


  ஜெட்ஸ்டாரின் நடத்தைக்கு ஆத்திரமடைந்த இசபெல்லா விமானத்திலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தொற்றுநோய்களின் போது வேறொருவரின் சீருடையை அணியச் செய்த விமானக் குழு உறுப்பினரின் நடவடிக்கை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மற்றவர்களின் தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

  இசபெல்லா தனக்கு நேர்ந்த இந்த விஷயத்தை அவமானமாக உணர்வதாக விவரித்தார். இது 2021 என்றும், 1921 இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், தான் விரும்பியதை அணிய தனக்கு உரிமையுண்டு என்றார்.

  இதற்கிடையே ஜெட்ஸ்டார் செய்தித் தொடர்பாளர் 9 நியூஸிடம், விமானத்தில் நடந்த சம்பவத்திற்காக, இசபெல்லிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். விமான சேவையின் கொள்கை குறித்து குழு உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தவறான புரிதல் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: