• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Udhayanidhi Stalin: மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய உதயநிதி-வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Udhayanidhi Stalin: மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய உதயநிதி-வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

ஆரவ்- உதயநிதி ஸ்டாலின்

ஆரவ்- உதயநிதி ஸ்டாலின்

எம்.எல்.ஏவாக பொறுப்பேற்று 70 தினங்கள் கடந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்புத்தளத்துக்கு உதயநிதி திரும்பியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற  உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏவாக பொறுப்பேற்ற நாளிலிருந்து தொகுதிப் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தார். அவ்வப்போது மக்கள் பணிக்காக வெளியூர் சென்றது தவிர்த்து மற்ற நாள்களில் அவரை தொகுதியில் பார்க்கலாம். ஆனால், எதற்கும் ஒரு என்ட் கார்ட் உண்டல்லவா.

    உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்கு சென்றதில் அவர் நடித்து வந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகள் தடைபட்டன. அதில் ஒன்று மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துவந்த கண்ணை நம்பாதே. த்ரில்லர் படமான இதில் உதயநிதியுடன் ஆத்மிகா நடித்து வந்தார். இன்னொரு படம், கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வந்த ஏஞ்சல். இதுவொரு ஹாரர் படம். பாயல், ஆனந்தி ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். அத்துடன் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்கிலும் உதயநிதி நடிப்பதாக இருந்தது.



    தேர்தல் முடிந்து எம்.எல்.ஏவாக பொறுப்பேற்று 70 தினங்கள் கடந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்புத்தளத்துக்கு உதயநிதி திரும்பியுள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முதலில் நடிக்கிறார். இதில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ்வும் முக்கிய வேடத்தில் வருகிறார். நித்தி அகர்வால், கலையரசன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. அரோல் கரோலி படத்துக்கு இசையமைக்கிறார்.

    Also Read: ''50 வருஷத்தில் இதுதான் முதல்முறை''.. ஹை ஸ்கூல் ரீயூனியன் போல உணர்கிறேன் - விக்ரம் முதல்நாள் படப்பிடிப்பு பற்றி கமல் நெகிழ்ச்சி

    மகிழ்திருமேனி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த தடம் ரசிகர்கள் பேராதரவுடன் வெற்றி பெற்றது முக்கியமானது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: