அமேசான் பிரைம் செய்த தவறும், சரியும்...!

குருதி

இந்த வருடம் அமேசான் தவறவிட்ட முக்கியமான திரைப்படம், தி கிரேட் இன்டியன் கிச்சன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்த வார இறுதியை அமேசான் பிரைம் வீடியோவின் வீக் என்ட் எனலாம். நேற்று அமேசான் பிரைம் வீடியோவில் பிருத்விராஜின் மலையாளப் படம் குருதி வெளியானது. படம் இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இன்று இந்திப் படம் சேர்ஷா வெளியாகியுள்ளது. 

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் கதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கரண் ஜோஹர் படத்தை தயாரிக்க, நம்மூர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். கேப்டன் விக்ரம் பத்ராவாக சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்தப் படமும் சிறப்பாக இருப்பதாக அனைத்து விமர்சகர்களும் ஒருசேர பாராட்டி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து நாளை மறுநாள் காட்ஸிலா வெர்சஸ் காங் வெளியாகிறது. திரையரங்கில் வெளியான இந்தப் படத்தை கொரோனா பயம் காரணமாக பார்க்க முடியாமல் போனவர்கள் நாளை மறுநாள் அமேசான் பிரைம் வீடியோவில் வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்கலாம்.

இந்த வருடம் அமேசான் தவறவிட்ட முக்கியமான திரைப்படம், தி கிரேட் இன்டியன் கிச்சன். இந்த மலையாளப் படத்தில் பெண்கள் சபரிமலை செல்வது தொடர்பான காட்சிகள் சில இடம்பெற்றிருந்தன. இது சர்ச்சையை உருவாக்கும் என படத்தை வாங்க அமேசான் மறுத்தது. அது பயந்ததற்கு மாறாக படம் இந்திய அளவில் பார்க்கப்பட்டு, பாராட்டப்பட்டது.

Also read... பகத் பாசிலுக்கு கல்தா... பிருத்விராஜ் படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

குருதி படமும் இந்து, முஸ்லீம் என்ற சென்சிடிவான பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதே. தி கிரேட் இன்டியன் கிச்சனில் செய்த தவறை இந்தமுறை அமேசான் செய்யவில்லை. உடனடியாக படத்தை வாங்கியது. அதற்கான பலனும் அமேசானுக்கு கிடைத்துள்ளது

கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்களிலும் குருதியை அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். சேர்ஷாவின் மூலம் இரண்டு நாளில் இரண்டு ஹிட் படங்களை தந்து இந்திய ஓடிடி தளங்களில் முதன்மை இடத்தில் அமேசான் பிரைம் வீடியோ தொடர்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: