OTTயில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதை அரசால் தடுக்க முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

OTTயில் திரைப்படம் வெளியிடுவதை தடுக்க முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

OTTயில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதை அரசால் தடுக்க முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவுகத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொது மக்களுக்கு மூன்று வேளையும் 2 முட்டைகள் இலவச உணவுடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் முழுபாதுகாப்பு உடன் செல்வதை ஆய்வு செய்தார். பின்னர்  கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘ தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லை.  வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெட்டுக்கிளிகள் தாக்குதல் போல் தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 54 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.


கடந்த ஆண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுதாக்கல் ஏற்பட்ட போது பாதிக்கபட்ட மானவாரி விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.5ஆயிரம், பாசன நீர் பகுதிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார்.

இந்தாண்டு அதுபோன்ற பாதிப்பு ஏற்படமால் இருக்கும் வகையில் 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குட்டி விமானங்கள் மூலமாக பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது.

இதனால் படைப்புழு தாக்குதல் இல்லை. இதை போன்று தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அணைகளில் இருந்து நீர் திறக்கவும் முதல்வர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.திருட்டு விசிடியை ஒழிக்க முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதன் பயனாக திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருட்டு விசிடி சட்டம் தற்பொழுதும் நடைமுறையில் உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே திருட்டு விசிடி, ஆன்லைனில் திருட்டுத்தனமாக திரைப்படம் வெளியாகமல் இருக்க நடவடிக்கை எடுக்க முடியும்,.

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. OTT பிரச்சினை என்பது திரைப்படதுறையினருக்கு மட்டுமல்ல உலகளாவிய பிரச்சினை. OTTயில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அரசு இதனை தடுக்க முடியும் என்றால் எப்போதோ தடுத்து இருப்போம். அரசு நேரிடையாக தடுக்க முடியாது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பிரபல திரை நச்சத்திரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பேசி இது குறித்து முடிவு எடுக்க அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், மத்தியரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்  மாநில அரசின் உரிமைகளை பறிக்கும். தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும். எனவே சட்டத்தினை தமிழக முதல்வர் மறுபரீசிலனை செய்ய மத்தியரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, காலம் தாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Also read... 'கும்பளங்கி நைட்ஸ்' போனிக்கு ஹேப்பி பர்த்டே










Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading