முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சினிமா படப்பிடிப்புக்கு எப்போது அனுமதி? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

சினிமா படப்பிடிப்புக்கு எப்போது அனுமதி? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

இங்குள்ள சூழ்நிலை, தொற்று பாதிப்பு, ஊரடங்கு பற்றியும், அனுமதி கொடுத்தால் மக்கள் எந்தளவு பணியாற்றுபவர்கள் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

  • Last Updated :

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுப்பது பற்றி விரைவில் முதல்வருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் வகையில் வெப்ப(காய்ச்சல்)பரிசோதனை கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றுது. இதனை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா பரிசோதனை பாதுகாப்பு அறைiயும் அமைச்சர் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் தனிமைப்படுத்தி கொண்டால் மட்டும் தான் கொரோனவை ஒழிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பலமுறை அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.

எனவே மக்கள் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். முதலில் கொரோனா வைரஸ் தாக்கம் தெரியவிட்டாலும் 10 தினங்களுக்கு பின்னர் தாக்கம் தெரிகிறது.

எனவே தான் வெளி மாநிலம், மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் அங்கு ஏற்கனவே பரிசோதனை செய்த இருந்தாலும் இங்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் தொற்று சரியாக கண்டறியப்படுகிறது.

சின்னத்திரை சேர்ந்தவர்கள் படபிடிப்பு நடத்த கோரிக்கை வைத்தனர். இன்று முதல் படபிடிப்பு நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா திரைப்பட படபிடிப்பு நடத்துவதற்கும் அனுமதி கேட்டுள்ளனர்.

சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்றைக்கு சாத்தியம் என்பது குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் மட்டும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள சூழ்நிலை, தொற்று பாதிப்பு, ஊரடங்கு பற்றியும், அனுமதி கொடுத்தால் மக்கள் எந்தளவு பணியாற்றுபவர்கள் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் பின்னர் முடிவு செய்யப்படும். திரையரங்கு உரிமையாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன். முதல்வர் உரிய நேரத்தில் முடிவை தெரிவிப்பார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

top videos

    First published: