’தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ

’தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்த முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையகரகத்தின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இன்னும் ஒரு வாரத்திற்குள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரைக்கு பல்வேறு தளர்வுகளையும், நிதியுதவியையும் தமிழக முதல்வர் வழங்கியுள்தாக தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தியேட்டர்களை திறந்தால் ஒரு மூன்று மணி நேரம் சிறிய இடத்திற்குள் அதிக மக்கள் இருக்கும்படியான சூழல் உண்டாகும் என்று தெரிவித்தார்.Also read... Big boss 4 | பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்.. சக போட்டியாளர்களால் மனமுடைந்த ஷிவானி..

மேலும் தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசும் தமிழக மருத்துவர் குழுவும் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் அதுகுறித்த முடிவை விரைவில் அறிப்பார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: