• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனா காலத்தில் இந்த பிரச்னை வேண்டாம்...! தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு கோரிக்கை

கொரோனா காலத்தில் இந்த பிரச்னை வேண்டாம்...! தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு கோரிக்கை

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

இதன் பின்னர் இருதரப்பினரும் அரசினை அணுகினால் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தலாம் என்பது தான் அரசின் கருத்து

  • Share this:
கொரோனா காலத்தில் இந்த பிரச்னை வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்ததை தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்கள் சார்ந்துள்ள திரைப்பட நிறுவனங்களின் படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்து இருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 20 தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில் சில முக்கிய நடிகர்களின் படங்களையும் ஆன்லைனில் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளிவர தொடங்கியுள்ளது.

இப்பிரச்சினைகள் குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘கொரோனா தொற்று இருக்கும் இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாராக இருந்தாலும் ஆன் லைலனில் திரைப்படம் வெளியிடுவது தொடர்பான பிரச்சினையை பெரிதுபடுத்தமால் இருக்க வேண்டும்.

கொரோனா தாக்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் திரைப்படம் வெளியிடுவதை பிரச்சினையாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளோம். தயாரிப்பாளர்கள் இதுவரை பொறுத்தது போன்று மே 3வரை பொறுத்து இருக்கலாம். இதன் பின்னர் இருதரப்பினரும் அரசினை அணுகினால் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தலாம் என்பது தான் அரசின் கருத்து. இரு தரப்பினரும் தற்பொழுது உள்ள சூழ்நிலைகளை யோசித்து பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: