முன்னாள் கவர்ச்சி நடிகை மியா கலிஃபாவுக்கும், ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார்.
ஆனால், இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதுவரை சிங்கிளாக இருந்து வந்த மியா கலிஃபா, ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் திருமணம் நிச்சயம் ஆன செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 14-ம் தேதி ராபர் சாண்ட்பர்க், மியா கலிஃபாவிடம் தனது காதலை புரொபஸ் செய்ய, அவரும் உடனடியாக அவரது காதலை ஏற்றுக் கொண்டாராம்.
பின்னர், நிச்சயதார்த்த மோதிரத்தை உணவு பாத்திரத்தில் வைத்து கொடுத்து அசத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படத்தில், மியா கலிஃபா தனது நிச்சயதார்த்த மோதிரத்துடன் போஸ் கொடுத்து உள்ளார்.
Also See..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mia Khalifa