சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகும் மெர்சல்

news18
Updated: September 12, 2018, 9:21 PM IST
சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகும் மெர்சல்
நடிகர் விஜய்
news18
Updated: September 12, 2018, 9:21 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் டிசம்பர் 6-ம் தேதி சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இப்படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப் போனது. இதனால் படம் எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை குவித்தது. இந்நிலையில் மெர்சல் படத்தின் உரிமத்தை சீனாவைச் சேர்ந்த ஹெச்.ஜி.சி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் மெர்சல் படத்தை மான்டரின் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் திட்டமிட்டிருந்தது.

அதன்படி உலகளவில் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படும் மெர்சல் திரைப்படம் சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் முதல் தமிழ்ப்படம் எனும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது. ஆமிர்கானின் தங்கல் திரைப்படம் அதிகபட்சமாக சீனாவில் மட்டும் ஆயிரம் கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த சாதனையை மெர்சல் திரைப்படம் முறியடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்