நடிகை மேக்னாராஜ் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்

நடிகை மேக்னாராஜ் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்

கணவரின் கட் அவுட் உடன் மேக்னாராஜ்

நடிகை மேக்னாராஜின் பெற்றோர் மற்றும் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

  • Share this:
கன்னட நடிகரும், அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 39. பழம்பெரும் கன்னட நடிகரான சக்தி பிரசாத்தின் பேரன் இவர்.

நடிகை மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவர் மரணமடைந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னாராஜ் கடந்த அக்டோபர் மாதத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மரணமடைந்த சிரஞ்சீவி சார்ஜா மீண்டும் மகன் வடிவில் வந்துவிட்டதாக ரசிகர்களும் குடும்பத்தினரும் கொண்டாடினர். இந்நிலையில் நடிகை மேக்னாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோரும், நானும் எனது குழந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுடன் கடந்த வாரத்தில் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதை தெரிவிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)


மேலும் மேக்னாராஜ் தனது பதிவில் கூறியிருப்பதாவது,“எனது சிகர்களும், சிருவின் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம். இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த ரசிகர்கள் மேக்னாராஜின் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். சிரஞ்சீவி சார்ஜாவின் மரணத்துக்குப் பின் சிரு வரவால் மகிழ்ச்சியடைந்திருந்த குடும்பத்துக்கு மீண்டும் இப்படி ஒரு சோதனையா என சிலர் தங்களது ஆதங்கத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: