முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூப்பர் ஸ்டாரை தொட்டுப் பார்க்கும் கனவு நனவானது - மேகா ஆகாஷ் குதூகலம்!

சூப்பர் ஸ்டாரை தொட்டுப் பார்க்கும் கனவு நனவானது - மேகா ஆகாஷ் குதூகலம்!

Megha akash| rajnikanth

Megha akash| rajnikanth

  • Last Updated :

ரஜினிகாந்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட்டியுள்ளார் நடிகை மேகா ஆகாஷ்.

`பேட்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து கல்லூரி போன்ற அரங்கு அமைத்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பின் சென்னை, செங்குன்றத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்குச் சொந்தமான படப்பிடிப்புத் தளத்திலும் நடைபெற்றது. தற்போது படக்குழு உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ, வாரணாசி, சோன்பாத்ரா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்திவருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “கனவு நனவானது. சில நேரங்களில் உங்களால் நட்சத்திரங்களைக்கூடத் தொடமுடியும்” எனக் கூறியுள்ளார்.

First published:

Tags: Megha akash, Petta shooting, Rajinikanth, Tweet