• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அடுத்தடுத்த வழக்குகளால் காவல்துறை என்னை தற்கொலைக்கு தூண்டுகிறது - நீதிபதி முன்பு கதறிய மீரா மிதுன்

அடுத்தடுத்த வழக்குகளால் காவல்துறை என்னை தற்கொலைக்கு தூண்டுகிறது - நீதிபதி முன்பு கதறிய மீரா மிதுன்

மீரா மிதுன்

மீரா மிதுன்

காவல்துறையினர் அடுத்தடுத்து என் மீது வழக்குப் பதிவு செய்வதன் மூலம் தற்கொலைக்கு தூண்டுகிறது என்று நீதிமன்றத்தில் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பிக் பாஸ் தமிழ் நடிகை மீரா மிதுன், பட்டியல் சாதி சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து அவர் மேல் பல புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை போலீசாரால் ஆகஸ்ட் 14 அன்று கைது செய்யப்பட்டார் மீரா மிதுன். தற்போது அவர் சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தால், ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் மீது எழுப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதனையடுத்து, மீரா மிதுன் மீது நிலுவையிலுள்ள வழக்குகளைச் சேகரித்து அதன்மீது குற்றப் பத்திரக்கை தாக்கல் செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமா ஈடுபட்டனர்.

    2020ஆம் ஆண்டு ஜோ மைக்கேல் என்பவரை தாக்க திட்டமிட்ட வழக்கிலும், கடந்த 2019 ஆம் ஆண்டில் நட்சத்திர விடுதியில் மேலாளரை மிரட்டிய விவகாரத்திலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த 2 வழக்குகளிலும் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததையடுத்து இன்று சட்ட விதிப்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் புழல் சிறையில் இருக்கும் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது, ‘காவல்துறையினர் அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டும் வகையில் மனதளவில் டார்ச்சர் செய்கின்றனர் என்று நீதிபதி முன்பு மீரா மிதுன் கதறி அழுதார். அதனையடுத்து, மீரா மிதுன் சார்பில் இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மீரா மிதுன் மீது நான்கு வழக்குகள் உள்ள நிலையில் இரண்டு வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் தொடர்பாக வரும் 14-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து, மீரா மிதுன் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: