விஜய் டிவி தரப்பில் இதுவரை எந்த ஒரு தொகையும் கொடுக்கப்படவில்லை என்று நடிகை மீராமிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட நடிகை மீராமிதுன், சேரன் தன்னைத் தவறாக தொட்டதாக கூறி நிகழ்ச்சியில் சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மீராமிதுன் தொடர்ச்சியான சர்ச்சை ஆடியோக்களால் பேசப்படும் நபராக மாறிப்போனார்.
பின்னர் சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த அவர், திடீரென மும்பை பறந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீராமிதுன், "40 நாட்கள் நான் இங்கு இல்லை. அதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு. என்னை குறித்த பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன. காவல்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
என் மேல் இரண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இரண்டுமே பொய்யானவை. என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல் பதிவு செய்தார்கள். லஞ்சம் வாங்கி கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். நானும் பணம் கொடுத்தால் அதையும் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்வார்கள் என நினைக்கிறேன்.
விஜய் டிவி, நிகழ்ச்சி முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு இப்போது எனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. சேரன் விவகாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அப்படி செய்து நிகழ்ச்சியை நிறுத்தினால் தான் எனக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும் என நினைக்கிறேன்.
விஜய் டிவி தலைமையில் இருப்பவர் என்னிடம் கெஞ்சினார். அதற்காக தான் குறைவான தொகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என்னிடம் முறையாக குறிப்பிட்ட காலத்தில் பணத்தைத் தருகிறேன் என கூறலாம் எதையும் கூறவில்லை. எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. அட்வான்ஸ் கூட வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மொத்தம் 35 நாட்கள் இருந்தேன். இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. இதன் பின்னரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் விஜய்டிவி பிரச்னையை சந்திக்க நேரிடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் யாரிடமும் உறவாடவில்லை, பழகவும் இல்லை, என் எண்ணும் யாரிடமும் இல்லை. சரவணன் நல்ல நபர் அவரிடம் மட்டும் பேசியுள்ளேன். எனக்கு ஒரு கால் செய்து கால அவகாசம் கூறியிருந்தால் கூட போதும். உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்தேன். மும்பை, கேரளா , கர்நாடக போலீசார் சிறப்பாக பணியாற்றுகின்றனர். பாதுகாப்பாக உள்ளது. மும்பையில் குடியேறிவிட்டேன்.
நான் அரசியலுக்கு வரவுள்ளேன். என்னை போல பிரபலங்களுக்கு இந்நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்?
அதிமுகவில் ஜெயலலிதா இருந்த போது சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பெண்கள் அமைச்சர் பதவிக்கு வரவேண்டும்’ என்று தெரிவித்தார்.
வீடியோ பார்க்க: தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம்... நாய்க்காக உயிரைவிட்ட இளம்பெண்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Meera Mithun