‘என் மூஞ்சிய நான் வெறுக்குறேன்.. தற்கொலை செய்ய போறேன்..’ நியாயம் கேட்டு கதறி அழுத மீரா மிதுன்

‘என் மூஞ்சிய நான் வெறுக்குறேன்.. தற்கொலை செய்ய போறேன்..’ நியாயம் கேட்டு கதறி அழுத மீரா மிதுன்

மீரா மிதுன்

நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றுக் கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்துள்ளார் மீரா மிதுன்.

  • Share this:
மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார்.இதனால் கோபமடைந்த ரசிகர்கள்  மீரா மிதுனை சமூக வலைதளங்களில்  கடுமையாக திட்டி வந்தனர்.

மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூறி ட்விட்டரில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார். அதில் ‘எனக்கு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என தோன்றுகிறது. எனது மன உளைச்சல் அனைத்தையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் எனக்கு மன நிம்மதி இல்லை. நான் இறந்துவிட்டால் என் தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறி பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.மேலும் இவரின் இந்த பதிவை சிலர் கலாய்த்து உள்ளனர். அந்த பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மீரா, சென்னை கமிஷ்னர் மகேஷ் அகர்வாலை டேக் செய்து நியாயம் கேட்டுள்ளார்.

 

 இதையடுத்து பிப்ரவரி 12 ஆம் தேதி மீரா மிதுன் தனது யூடியூப் பக்கத்தில் 'depression'என்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில்  ’நான் இதுவரை செய்த வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதனால் எனக்கு எதுவும் செய்ய பிடிக்கவில்லை.உங்க எல்லார் மேலையும் என்னால கேஸ் போட முடியும்.என் மூஞ்சிய எல்லாரும் திருடிட்டு இருக்காங்க.அதனால் என் மூஞ்சிய நான் வெறுக்குற நிலைமைக்கு வந்துட்டேன்’ எனக் கூறி கதறி அழுதுள்ளார்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 
Published by:Tamilmalar Natarajan
First published: