பிக்பாஸ் போட்டியாளரின் கிரீன் இந்தியா சவாலை ஏற்றுக் கொண்ட மீனா!
ஆங்கரும், தெலுங்கு பிக் பாஸ் 4 போட்டியாளருமான தேவி நாகவல்லி கொடுத்த கிரீன் இந்தியா சவாலை மீனா ஏற்றுக்கொண்டார்.

மீனா
- News18 Tamil
- Last Updated: January 18, 2021, 11:03 AM IST
பிக்பாஸ் போட்டியாளரின் கிரீன் இந்தியா சவாலை ஏற்றுக் கொண்டார் நடிகை மீனா.
90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. எஜமான், முத்து, சேதுபதி ஐபிஎஸ், நாட்டாமை போனற பல படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
தற்போது தெலுங்கானா எம்.பி. சந்தோஷ்குமார் முன்னெடுத்த முயற்சியான கிரீன் இந்தியா சவாலில் பங்கெடுத்துள்ளார். ஆங்கரும், தெலுங்கு பிக் பாஸ் 4 போட்டியாளருமான தேவி நாகவல்லி கொடுத்த கிரீன் இந்தியா சவாலை மீனா ஏற்றுக்கொண்டார். சென்னை சைதாபேட்டையில் உள்ள அவரது வீட்டில் மரக்கன்றுகளை அவர் நட்டார். அப்போது பேசிய மீனா, "சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது, பசுமையை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும். இதுதான் இயற்கைக்கும், நம் மண்ணிற்கும் நாம் திருப்பி செலுத்தும் நன்றிக் கடன்" என்றார்.
இந்த தன்னலமற்ற விஷயத்தை தெலுங்கானாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரப்பியதற்காக டி.ஆர்.எஸ் எம்.பி. சந்தோஷை அவர் பாராட்டினார். மேலும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் சுதீப், மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை மரக்கன்றுகளை நடவு செய்ய நாமினேட் செய்தார் மீனா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. எஜமான், முத்து, சேதுபதி ஐபிஎஸ், நாட்டாமை போனற பல படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
தற்போது தெலுங்கானா எம்.பி. சந்தோஷ்குமார் முன்னெடுத்த முயற்சியான கிரீன் இந்தியா சவாலில் பங்கெடுத்துள்ளார். ஆங்கரும், தெலுங்கு பிக் பாஸ் 4 போட்டியாளருமான தேவி நாகவல்லி கொடுத்த கிரீன் இந்தியா சவாலை மீனா ஏற்றுக்கொண்டார்.