Master Twitter Review | சந்தும் பொந்தும் சரவெடி.. முதல் பாதி அதிரடி... இணையத்தை கலக்கும் மாஸ்டர் விமர்சனம்

இணையத்தை கலக்கும் மாஸ்டர் விமர்சனம்

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் குறித்த பாராட்டுகளும் , விமர்சனங்களும் இணையத்தில் பதிவிடப்பட்டு வருகின்றது. திரைப்படம் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முதல் நாள் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அட்லி நடிகர் அர்ஜுன் தாஸ் கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.படம் முடிந்த பின்னர் ரசிகர்களின் புடைசூழ வெளியே வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    இதனிடையே இணையத்தில் இன்றைய தினம் MasterFDFS என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிகள் இடம் பிடித்துள்ளது. பலரும் மாஸ்டர் திரைப்படம் குறித்து இதில் பதிவிட்டு வருகின்றனர்.

     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

    கதைப்படி விஜய் ஹீரோவாக இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோவாக படத்தையே தாங்கி நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

    மேலும் படிக்க....Master Review - மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

    மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார் விஜய்சேதுபதி என மாஸ்டர் படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
    Published by:Sankaravadivoo G
    First published: