முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜனவரி 7-ல் மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு- திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு

ஜனவரி 7-ல் மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு- திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு

மாஸ்டர்

மாஸ்டர்

ஜனவரி 7ஆம் தேதி மாஸ்டர் திரைப்டத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்ற தகவலை திரையரங்க உரிமையாளர்கள் மறுத்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் 'மாஸ்டர்’ திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என உறுதியளித்தார். தியேட்டரில் வெளிவந்த பின்னரே ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளிவரும் என்பதையும் குறிப்பிட்டார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை, அப்பாடா என பெருமூச்சு விட வைத்தது.

இதையடுத்து 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே மாஸ்டர் திரைப்படம் திரையங்கில் வெளியிடப்படும் என படத்தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ள நிலையில் ஜனவரி 13 அல்லது 14 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஜனவரி 7ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினரும், திரையரங்கு உரிமையாளர்களும் மறுத்துள்ளனர்.

மேலும் தளபதி 65 திரைப்படமானது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Acor Vijay, Cinema, Master, Thalapathy 64