தயவுசெய்து லீக்கான காட்சிகளைப் பகிராதீர்கள் - மாஸ்டர் படக் குழு வேண்டுகோள்

தயவுசெய்து லீக்கான காட்சிகளைப் பகிராதீர்கள் - மாஸ்டர் படக் குழு வேண்டுகோள்

மாஸ்டர்

இணையத்தில் பரவிவரும் மாஸ்டர் படக் காட்சிகளை யாரும் ஷேர் செய்யவேண்டாம் என்று படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

  • Share this:
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இதனிடையே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும் ட்ரெய்லர் குறித்த எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்த படக்குழு தியேட்டர்களில் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

    அதேவேளையில் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற பழைய நிலையே தொடரும் என்று அறிவித்தது.

    கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களைக் கடந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில், மாஸ்டர் படம் வெளியாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனால், படக்குழு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இணையத்தில் பரவும் காட்சிகளை யாரும் ஷேர் செய்யவேண்டாம் என்று படக்குழுவினர் கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.


    இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட ட்வீட்டில், ‘மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்டுவருவதற்கு ஒன்றரை வருடம் போராடியுள்ளோம். இந்தப் படத்தை நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடி பார்ப்பீர்கள் என்று நாங்கள் எல்லோரும் நம்புகிறோம். படத்திலிருந்து வெளியான காட்சி உங்களுக்கு வந்தால் தயவு செய்து யாருக்கும் பகிராதீர்கள். ஒரு நாள் மட்டுமே உள்ளது. மாஸ்டர் உங்கள் எல்லாருக்குமானது. எல்லாருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘மாஸ்டர் படத்திலிருந்து வெளியான காட்சிகளை யாரும் பகிரவேண்டாம் என்று மாஸ்டர் படக்குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மாஸ்டர் காட்சிகள் எதும் வந்தால் report@blockxpiracy.com-ல் எங்களிடம் பகிருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: