‘முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்’முதல் முறையாக விஜய் பேசும் வீடியோவை வெளியிட்ட மாஸ்டர் படக்குழு..

‘முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்’முதல் முறையாக விஜய் பேசும் வீடியோவை வெளியிட்ட மாஸ்டர் படக்குழு..

மாஸ்டர்

மாஸ்டர் படத்தின் இரண்டாவது ப்ரோமோவை மாஸ்டர் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

  • Share this:
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இரண்டு பேரான விஜய் மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருப்பதால் படம் நிச்சயமாக வெற்றிப் பெறும் என படம் வெளியாவதற்கு முன்னரே விமர்சனங்கள் எழுந்து வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி, ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. படத்தின் டீசர் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நிலையில்,படத்தின் ட்ரைலரை எப்போது தான் வெளிவிடுவீங்க என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இதையடுத்து மாஸ்டர் படத்தின் முதல் ப்ரோமோவை நேற்று படக்குழு வெளியிட்டது.அதில் வாத்தி பாடல் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது ப்ரோமோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.அதில் முதல் முறையாக விஜய் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

 



‘இதுக்கு முன்னாடி இங்க வந்தவலாம் உயிர் பயத்துல ஓடி போயிருக்கலாம்.ஆனா என் கதையே வேற, முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்’போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது.இது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த வார இறுதியில் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published: