மாஸ்டர் படத்தின் கதைக்கரு இதான்! இணையத்தில் தீயாய் பரவும் சுவாரஸ்ய தகவல்கள்

மாஸ்டர் படத்தின் கதைக்கரு இதான்! இணையத்தில் தீயாய் பரவும் சுவாரஸ்ய தகவல்கள்

மாஸ்டர்

பொங்கலுக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் கதைக்கரு முதல் முறையாக வெளியாகிவுள்ளது.

 • Share this:
  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.இவர் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் மாஸ்டர் படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

  மாஸ்டர் திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.ஹிந்தியில் மட்டும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மாஸ்டர் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு வெளிநாடுகளில் படத்திற்கான டிக்கெட்கள் புக்கிங் தொடங்கியுள்ளது.அதன்படி படத்தின் கதைக்கரு அங்குள்ள திரையரங்குகளின் வெப்சைட்டில் பதிவிடப்பட்டுள்ளது.

  அதில்' கல்லூரியில் பேராசியராக பணியாற்றும் நடிகர் விஜய் ஒரு குழந்தைகள் நல காப்பகத்திற்கு பாடம் எடுப்பதற்காக மூன்று மாதங்கள் அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே காப்பகத்தின் பொறுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி, குழந்தைகளை வைத்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார். இதனால் விஜய், விஜய் சேதுபதி இடையே மோதல் தொடங்குகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் மாஸ்டர் படம் மூன்று நேரம் ஓடக்கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.  மாஸ்டர் படத்தின் கதை பற்றி ஆவலாக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில்,முதல் முறையாக படத்தின் கதைக்கரு வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: