வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார் விஜய் சேதுபதி - மாஸ்டரை புகழும் ஈஸ்வரன் இயக்குநர்

விஜய் சேதுபதி

மாஸ்டர் படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.

படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பலரும் பொங்கலுக்கு சரியான விருந்தாக மாஸ்டர் படம் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மாஸ்டர் குறித்து கூறுகையில், "மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை எங்கள் ஊரில் உள்ள திரையரங்கில் பார்த்து ரசித்தேன். துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யின் மாஸ்டர் பீஸாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார் விஜய்.

இந்த மாதிரியான ஒரு கதையை விஜய்க்கு கொடுத்ததற்கு லோகேஷ் கனகராஜூக்கு நன்றி. திரைக்கதை அமைப்பது தொடங்கி நடிகர்கள் தேர்வு வரை மிகச்சரியாக கையாண்டிருக்கிறார் லோகேஷ்.

குறிப்பாக விஜய் சேதுபதியை சொல்ல வேண்டும். வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : Master Review - மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

சுசீந்திரன் - சிம்பு கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ஈஸ்வரன்’ திரைப்படம் நாளை திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: