Master Release: தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
- News18 Tamil
- Last Updated: January 13, 2021, 7:52 AM IST
நீண்ட இழுபறிக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸானது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டன. முன்பதிவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்க்க வந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. மேலும் படிக்க... Master Release | 'பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற'... கேக் வெட்டி குதூகல கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் (படங்கள் )
சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, திருநெல்வேலி, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில், இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். கோவையில் கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள், பூசணிக்காயை வைத்து திருஷ்டி கழித்தனர்.
அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டன. முன்பதிவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்க்க வந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஆண்டு திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது.