மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்தப்படம் தொடக்கம்!

மாஸ்டர் தயாரிப்பாளர்

இதனை சீனு ராமசாமியின் உதவியாளர் ராஜ்குமார் இயக்குகிறார்.

 • Share this:
  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேல் வசூலித்தது.

  இந்த திரைப்படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் பேனரில் தயாரித்தார். தற்போது அவர் தனது அடுத்தப் படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார்.

  அடுத்ததாக ’அழகிய கண்ணே’ என்ற தலைப்பில் பெண்ணை மையப் படுத்திய படத்தைத் அவர் தயாரிக்கிறார். அந்தப் படத்தை சேவியரின் மற்ற பதாகையான எஸ்தெல் என்டர்டெயினர் தயாரிக்கிகிறது. இதனை சீனு ராமசாமியின் உதவியாளர் ராஜ்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

  அழகிய கண்ணே படத்தில் சஞ்சிதா ஷெட்டி மற்றும் பட்டிமன்ற புகழ் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன், லியோ ராஜ்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: